ஐபிஎல் போட்டிக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோஹித் சர்மா பயிற்சியின்போது அதிரடியாக ஸ்டேடியத்தை தாண்டி அடித்த சிக்ஸ் சாலையில் சென்ற பேருந்து மீது பந்து விழுந்தது. நல்ல வேளையாக பஸ் கண்ணாடி தப்பியது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் துபாயிலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் நடைபெறுகிறது. ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக அனைத்து ஐபிஎல் அணி வீரர்களும் துபாய் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐபிஎல் முதல் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செப்டம்பர் 19ம் தேதி நடைபெறுகிறது. முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இதனால் இரு அணி வீரர்களும் தீவிர வளைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி தனது அதிகார்ப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், பயிர்சியில் ஈடுபட்டுள்ள ரோஹித் சர்மா, ஒரு சுழற்பந்து விச்சாளரின் பந்தை அதிரடியாக தூக்கி அடித்த கிரேட் சிக்ஸ் அடிக்க பந்து ஸ்டேடியத்தை தாண்டி சாலையில் சென்ற பேருந்து மீது விழுந்தது.
அப்போது, ரோஹித் சர்மாவுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் பஸ் கண்ணாடி உடைந்துவிட்டதா இல்லையா பாருங்கள் என்று கூறுகிறார். நல்ல வேளையாக ரோஹித் சர்மாவின் அடியில் பஸ் கண்ணாடி தப்பியது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி ஐபிஎல் போட்டிகளின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"