மோஸ்ட் வான்ட்டட் ‘176’! மிரட்டிய ரோஹித் ஷர்மா – பணிந்த தென்.ஆ., பவுலர்கள்

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் ரோஹித் ஷர்மாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுவும், ஓப்பனிங் பேட்ஸ்மேனாக. பொதுவாக அக்ரஸிவ் மைண்ட்செட் கொண்ட ரோஹித், டெஸ்ட்டில் ஓப்பனராக களமிறக்கப்பட்டால் சாதிப்பாரா? அவரால் 100 பந்துகளுக்கும் மேல் நிதானமாக எதிர்கொள்ள முடியுமா?  என்ற ஐயங்கள் எழுந்தன. ஆனால், அவற்றிற்கெல்லாம் தனது…

By: Published: October 3, 2019, 2:01:55 PM

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் ரோஹித் ஷர்மாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுவும், ஓப்பனிங் பேட்ஸ்மேனாக. பொதுவாக அக்ரஸிவ் மைண்ட்செட் கொண்ட ரோஹித், டெஸ்ட்டில் ஓப்பனராக களமிறக்கப்பட்டால் சாதிப்பாரா? அவரால் 100 பந்துகளுக்கும் மேல் நிதானமாக எதிர்கொள்ள முடியுமா?  என்ற ஐயங்கள் எழுந்தன.

ஆனால், அவற்றிற்கெல்லாம் தனது 176 மூலம் பதில் அளித்திருக்கிறார் இந்த ஹிட்மேன்.


அதுவும், ஓப்பனராக இறங்கினால் ரோஹித் ஷர்மாவின் டெஸ்ட் கரியரே காலி எனும் கருத்தியலை முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் ஓப்பனாக தெரிவிக்க, ரோஹித் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியது.


ஆனால், விசாகப்பட்டினத்தின் ஃபிளாட் பிட்சில், பேட்டிங்குக்கு சாதகமான சூழலில், சாதகமான வானிலையோடு, தனது முதல் ‘ஓப்பனர்’ சதத்தை நிறைவு செய்திருக்கிறார்.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் கிரிக்கெட் லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டு காண இங்கே க்ளிக் செய்யவும்

இப்போட்டியில் சதம் விளாசிய ரோஹித் ஷர்மா முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் சாதனையை சமன் செய்தார். சொந்த மண்ணில் நடந்த டெஸ்டில் தொடர்ச்சியாக 6 அரைசதம் அடித்து அசத்திய வீரர் என்ற டிராவிட் சாதனையை ரோஹித் சமன் செய்திருக்கிறார்.

டிராவிட் கடந்த 1997 – 1998 இடைப்பட்ட காலத்தில் 6 அரைசதம் அடித்தார். இதே போல கடந்த 2016 – 2019* வரை ரோஹித் ஷர்மா தொடர்ந்து 6 அரைசதங்கள் அடித்துள்ளார். இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் ஷர்மா அடித்த ஸ்கோர்கள்.

82, 51*, 102*, 65, 50* , 115*

மேலும் பல சாதனைகள் இப்போட்டியில் நிகழ்த்தப்பட்டுள்ளது.

துவக்க வீரர்களான ரோஹித் ஷர்மா, மாயங்க் அகர்வால் முதல் விக்கெட்டுக்கு 317 ரன்கள் சேர்த்தனர். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஷேவாக் – காம்பீர் ஜோடியின் சாதனை தகர்க்கப்பட்டது.

இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் இந்திய அணிக்காக 300 ரன்களுக்கு மேல் சேர்த்த மூன்றாவது ஜோடி என்ற பெருமையைப் பெற்றது.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த இந்திய ஜோடி:

317 மாயங்க் அகர்வால் – ரோஹித் ஷர்மா, 2019/20 *
218 ஷேவாக் – காம்பீர் , 2004/05
213 ஷேவாக் – வாசிம் ஜாபர் 2007/08

தவிர , தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் சேர்த்த ஜோடிகள் பட்டியலில் ரோஹித் ஷர்மா, மாயங்க் அகர்வால் ஜோடி பெற்றது.

317 மாயங்க் அகர்வால் – ரோஹித் ஷர்மா, 2019/20 (முதல் விக்கெட்)
268 சேவாக் – டிராவிட் 2007/08 (இரண்டாவது விக்கெட்)
259* லக்ஷ்மன் – தோனி 2009/10 (7வது விக்கெட்)
249 ஷேவாக் – சச்சின் 2009/10 (3வது விக்கெட்)

இந்திய அணிக்காக அதிக ரன்கள் சேர்த்த துவக்க வீரர்கள் பட்டியல் :

413 வினோ மான்கட் – ராய், எதிரணி – நியூசி ., 1955/56
410 சேவாக் – திராவிட், எதிரணி – பாக்., 2005/06
317 மாயங்க் அகர்வால் – ரோஹித், எதிரணி – தென் ஆப்பிரிக்கா, 2019/20

லோகேஷ் ராகுல் நீக்கப்பட்டதால், அதன் மூலம் தனக்கு கிடைத்த ஓப்பனிங் வாய்ப்பை நன்கு பயன்படுத்தி இருக்கிறார் ரோஹித். ஆனால், இதை மெயின்டெய்ன் செய்வதே இங்கு மிக முக்கியம். இதே கன்சிஸ்டன்சி உள்நாட்டில் மட்டுமல்லாது, வெளிநாட்டிலும் தொடரும் பட்சத்தில், ஓப்பனிங்கில் மிரட்டும் ஷேவாக்கை, ரோஹித் ரீபிளேஸ் செய்வது நிச்சயம்!.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Sports News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Rohit sharma holds records as test opener ind vs sa 1st test

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X