Rohit sharma is the best captain : நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். சாம்பியன் இறுதி போட்டியில் டெல்லி கேபிடல்ஸை வீழ்த்தி 2 வது முறையாக தொடர்ந்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது மும்பை இந்தியன்ஸ். இதுவரை நடைபெற்ற 13 தொடர்களில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது இந்த அணி. முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்களை இழந்து 156 ரன்கள் எடுத்தது. 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 18.4 ஓவர்களில் 157 ரன்கள் சேர்த்து வெற்றியை உறுதி செய்தது.
ரோஹித் சர்மா கேப்டன்சியில், மும்பை இந்தியன்ஸ் அணி 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் கூட ரோஹிதை ஒருநாள், டி20 அணிகளுக்கு கேப்டனாக அறிவிக்காதது வெட்கக்கேடு என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரும், எம்.பியுமான கௌதம் கம்பீர் கூறியுள்ளார். ஈஎஸ்பின் கிரிக் இன்போவில் பேசிய கௌதம் காம்பீர் “ குறைந்த ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித்தை ஏன் தேர்வு செய்யவில்லை? இனியும் அவருக்கு கேப்டன் பொறுப்பை அளிக்கவில்லை என்றால் அது துரதிர்ஷ்டமானது என்று கூறியுள்ளார்.
முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி போன்றே ரோஹித் சர்மாவும் சிறந்த கேப்டன். ஒரு கிரிக்கெ வீரரை கேப்டனாக நியமிக்க என்ன அளவுகோல்கள் இருக்கிறது? ரோஹித் சர்மா 5 முறை ஐபிஎல் சாம்பியன்ஷிப்பை அணிக்காக பெற்றுத்தந்துள்ளார். விராட் கோலிக்கும் ரோஹித்திற்கும் கேப்டன் பொறுப்பை பிரித்துக் கொடுப்பதனால் ஒரு கேடும் விளையாது. விராட் கோலியை விட ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா சிறந்த கேப்டனாக விளங்குவார். கேப்டன் பொறுப்பை பெற தகுதியுடையவர்கள் யார் என்பதற்கான அளவுகோல்கள் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும் என்றும் கௌதம் காம்பீர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil