நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து இந்திய டி20 அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா பொறுப்பேற்க உள்ளார். டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலிக்கு நியூசிலாந்து தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் தொடருக்கான அணி செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் ஆல்-ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை.
டி 20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய டீம் இந்தியாவுக்கான மோசமான வெளியேற்றத்திற்குப் பிறகு நியூசிலாந்து உடனான போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் புதிய முகங்களுக்கான இடம் பற்றி அதிகம் பேசப்பட்டது. அந்த உணர்வை வைத்து, ஒருவேளை அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு ஐபிஎல்லில் அபாரமாக அடித்த ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நீண்ட ஸ்பெல்களில் பந்துவீச பாண்டியாவின் இயலாமையால் இந்திய அணி தடுமாறிக் கிடக்கும் நேரத்தில், மற்ற வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்களுடன் விருப்பங்களை ஆராயும் நேரத்தில் வெங்கடேஷ் ஐயரின் சேர்க்கை முக்கியமானது.
மற்ற குறிப்பிடத்தக்க சேர்க்கைகளில், மூத்த லெக்-ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஆகியோர் அணிக்குத் திரும்புகின்றனர், மேலும் புதுமுக வீரராக வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேலும் சேர்க்கப்பட்டுள்ளார்.
ரோஹித்தின் நியமனம் ஒரு சம்பிரதாயமானது மற்றும் KL ராகுல் டி20 போட்டிகளில் துணை கேப்டனாக இருப்பார்.
நவம்பர் 17ஆம் தேதி முதல் இந்தியா, நியூசிலாந்து அணியுடன் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
அணி விவரம்:
ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், ஆர்.அஷ்வின், அக்சர் படேல் , அவேஷ் கான், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil