Advertisment

'டெஸ்ட் கிரிக்கெட்டை பாதுகாக்க வேண்டியது நமது கடமை': ரோகித் கூற காரணம் என்ன?

“டெஸ்ட் கிரிக்கெட் என்பது நாம் அனைவரும் பாதுகாக்க வேண்டிய ஒன்று. இது ஒன்று அல்லது இரண்டு நாடுகளின் பொறுப்பு மட்டுமல்ல." என்று கேப்டன் ரோகித் கூறினார்.

author-image
WebDesk
New Update
Rohit Sharma on CSA opting for SA20 League over New Zealand series Tamil News

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடு குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கவலை தெரிவித்துள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Rohit Sharma: இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரைப் போல் தென் ஆப்பிரிக்காவில் எஸ்.ஏ-20 லீக் விளையாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடரில் ஐடன் மார்க்ராம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில், 2024ம் ஆண்டுக்கான தொடர் வருகிற 10ம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. 

Advertisment

இந்நிலையில், தென் ஆப்பிரிக்க (சி.எஸ்.ஏ) கிரிக்கெட் வாரியம் அதன் சிறந்த வீரர்கள் எஸ்.ஏ-20 லீக் தொடரில் பங்கேற்பதற்கு முன்னுரிமை அளித்து வருகிறது. இதனால், அடுத்த மாதம் தொடங்கும் நியூசிலாந்திற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு அனுபவமற்ற 2-ம் தர வீரர்களைக் கொண்ட அணியை களமிறக்குகிறது. 

பிப்ரவரி தொடக்கத்தில் தொடங்கும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான 14 பேர் கொண்ட அணியை தென் ஆப்ரிக்க வாரியம் கடந்த வாரத்தில் அறிவித்தது. அந்த அணியில் இடம் பெற்றுள்ள 7 வீரர்கள் இதுவரை தென் ஆப்ரிக்க அணிக்காக விளையாடாத அறிமுக வீரர்கள் (அன்-கேப்டு வீரர்கள்). மேலும் பாக்சிங் டே டெஸ்டில் இந்தியாவை வீழ்த்திய அணியில் உள்ள டேவிட் பெடிங்ஹாம் மற்றும் கீகன் பீட்டர்சன் ஆகிய இரண்டு வீரர்களைத் தவிர மற்ற அனைவரும் எஸ்.ஏ-20 லீக்கில் விளையாட உள்ளனர். இது கிரிக்கெட் உலகில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. 

கேப்டன் ரோகித் கருத்து 

இந்த நிலையில், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடு குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரோகித் கேப்டவுனில் இன்று (புதன்கிழமை) தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், "என்னைப் பொறுத்தவரை, டெஸ்ட் இறுதி சவாலாக உள்ளது. மேலும் அந்த வடிவத்தில் சிறந்த வீரர்கள் விளையாடுவதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம். ஆனால் ஒவ்வொருவருக்கும் சொந்த பிரச்சனைகளை சமாளிக்கவும், அதற்கு பின்னால் ஒரு காரணம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 

தென் ஆப்ரிக்கா அதன் மூத்த வீரர்களை தேர்வு செய்யாததற்கு எனக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வீரர்கள் விளையாடுவதை நீங்கள் பார்க்க விரும்புகிறீர்கள். ஆனால் நான் சொன்னது போல் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியத்தில் உள்ள விவாதங்கள் என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் எனது பார்வையில், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இது நீங்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் ஒரு சவால், ”என்று கூறினார்.

கிரிக்கெட்டின் வருடாந்திர காலண்டரில் ஐ.பி.எல் இடையில் வந்தால் என்ன முடிவு எடுப்பீர்கள் என கேப்டன் ரோகித்திடம் கேட்கப்பட்ட நிலையில், "இந்த நேரத்தில் எங்களுக்கு இதுபோன்ற பிரச்சனைகள் இல்லை என்று நான் உணர்கிறேன்," என்று அவர் புன்னகையுடன் பதிலளித்தார். இந்த விஷயம் தொடர்பாக மேலும் அழுத்தமாக கேள்வி எழுப்படுகையில், 'கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டியை தக்கவைக்க உதவுவது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொறுப்பு' என்று தெரிவித்தார். 

“டெஸ்ட் கிரிக்கெட் என்பது நாம் அனைவரும் பாதுகாக்க வேண்டிய ஒன்று. இது ஒன்று அல்லது இரண்டு நாடுகளின் பொறுப்பு மட்டுமல்ல. விளையாடும் அனைவருமே அதை அழகாகவும் பொழுதுபோக்காகவும் வைத்திருங்கள். உலகம் முழுவதும், நீங்கள் சில திடமான டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதைக் காணலாம், எல்லா இடங்களிலும் நீங்கள் முடிவுகளைப் பார்த்திருக்கிறீர்கள் மற்றும் போட்டி கிரிக்கெட் விளையாடுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். எனவே அது அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதி செய்வது அனைவரின் கடமையாகும். அதை மக்கள் பார்க்க வருகிறார்கள். அது அனைவரின் பொறுப்பு” என்று கேப்டன் ரோகித் கூறினார்.

கேப்டன் டீன் எல்கர் கருத்து 

கேப்டவுனில் நடைபெறும் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெறவுள்ள தென் ஆப்பிரிக்காவின் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் டீன் எல்கர், தென் ஆப்பிரிக்காவில் தற்போது நிலவும் சூழ்நிலையை "சிறந்ததல்ல" என்று குறிப்பிட்டார்.

"கிரிக்கெட் சகோதரத்துவக் கண்ணோட்டத்தில் நாங்கள் வைக்கப்பட்டுள்ள சூழ்நிலை சிறந்ததல்ல. நியூசிலாந்திற்குச் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட அணி டெஸ்ட் கிரிக்கெட்டை நான் எப்படிப் பார்க்கிறேன் என்ற உரையாடலுக்கு ஏற்றதாக இல்லை. 

திரைக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பதை எங்களால் கட்டுப்படுத்த முடியாது என்பதால் அதை அந்த வெளிச்சத்தில் பார்க்க வேண்டும். இது வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அணி நிர்வாகத்தின் கைகளில் இல்லை, ”என்று அவர் கூறினார்.

ஸ்டீவ் வாக் கண்டனம் 

முன்னதாக, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுக்கு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக அவர் 'தி சிட்னி மார்னிங் ஹெரால்ட்' செய்தி இதழுக்கு அளித்த பேட்டியில், "தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் கிரிக்கெட் குறித்து கவலைப்படவில்லை. நான் நியூசிலாந்து அணியில் இருந்தால் நிச்சயம் இந்த டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டேன். அவர்கள் ஏன்? விளையாடுகிறார்கள் எனத் தெரியவில்லை. 

நியூசிலாந்து கிரிக்கெட்டுக்கு அவர்கள் உரிய மரியாதை கொடுக்காத போது, எதற்காக விளையாட வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட் அழிவை நோக்கி செல்கிறதா என்று கேட்க வைக்கிறது. ஐ.சி.சி மற்றும் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

இதில் ஐ.சி.சி.யோ அல்லது சம்பந்தப்பட்டவர்களோ விரைவில் தலையிடாவிட்டால் டெஸ்ட் கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட்டாகவே இருக்காது. ஏனெனில் நீங்கள் உங்களது திறமையை மிகச்சிறந்த வீரர்களுக்கு எதிராக சோதிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய் விடும். பெரிய கிரிக்கெட் வாரியங்கள் தங்களது வீரர்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஊக்குவிக்க வேண்டும்." என்று கூறினார். 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Rohit Sharma on CSA opting for SA20 League over New Zealand series

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Rohit Sharma
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment