Advertisment

இப்போதைக்கு அப்படியொரு ஐடியா இல்ல... ஒருநாள், டெஸ்ட் ஓய்வு குறித்து ரோகித் சொன்ன பதில்!

2025 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்தியாவுக்கு கோப்பையை வெல்வதே தம்முடைய லட்சியம் என்றும், தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் தம்மிடம் இல்லை என்றும் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rohit Sharma on his ODI Test future Tamil News

இந்தியாவுக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் "குறைந்தது சிறிது காலத்திற்கு" தொடர்ந்து விளையாட விரும்புவதாக ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த மாதம் நடைபெற்ற ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. இந்த வெற்றியுடன் கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் தங்களது ஓய்வை அறிவித்தனர்.

Advertisment

இந்திய டி20 அணியில் கடந்த 2007 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்த ரோகித், 159 போட்டிகளில் 5 சதங்கள் மற்றும் 32 அரைசதங்களுடன் 4231 ரன்கள் எடுத்து டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரராக விடைபெற்றார். இறுதிப் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ரோகித் பேசுகையில், “இது தான் எனது கடைசி (டி20) ஆட்டம். இந்த ஃபார்மெட்டில் விடைபெற இதைவிட சிறந்த நேரம் கிடைக்காது. இதன் ஒவ்வொரு தருணத்தையும் நான் விரும்புகிறேன். 

நான் எனது இந்திய கிரிக்கெட் வாழ்க்கையை இந்த வடிவத்தில் விளையாடத் தொடங்கினேன். இதைத்தான் நான் மிகவும் விரும்பினேன். அத்துடன் கோப்பையை வெல்லவும் அதிகம் விரும்பினேன். அதை வார்த்தைகளில் சொல்வது மிகவும் கடினம். அது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம். என் வாழ்க்கையில் இந்த சாம்பியன் பட்டத்திற்காக நான் மிகவும் ஆசைப்பட்டேன். இறுதியில் நாங்கள் எல்லையைத் தாண்டியதில் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று அவர் கூறினார்.

ஆங்கிலத்தில் படிக்கவும்: Rohit Sharma on his ODI, Test future

இந்நிலையில், டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ரோகித் சர்மா, இந்தியாவுக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் "குறைந்தது சிறிது காலத்திற்கு" தொடர்ந்து விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார். 2025 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்தியாவுக்கு கோப்பையை வெல்வதே தம்முடைய லட்சியம் என்றும், தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் தம்மிடம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

நேற்று ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவில் நடந்த விளம்பர நிகழ்ச்சியின் போது ரோகித் பேசுகையில், "இதை நான் ஏற்கனவே கூறியுள்ளேன். மிகவும் நீண்ட தூரம் எதையும் செய்யவில்லை. எனவே, நான் நீண்ட காலம் விளையாடுவதை நீங்கள் பார்க்க முடியும். இதுவரை முழுமையான ஓய்வு பற்றி நான் சிந்திக்கவில்லை. ஆனால் வாழ்க்கை உங்களை எங்கே எடுத்துச் செல்லும் என்பது எனக்கு தெரியாது. 

தற்சமயத்தில் நான் நன்றாக விளையாடுகிறேன். எனவே இன்னும் சில வருடங்கள் நான் தொடர்ந்து விளையாடலாம் என்று நினைக்கிறேன். அதன்பின் எனக்குத் தெரியாது. தற்போதைக்கு சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல விரும்புகிறேன். அதன்பிறகு, 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல். அதற்கு இந்தியா தகுதி பெறும் என்று நான் நம்புகிறேன்" என கூறினார்.

தொடக்க ஆட்டக்காரராகவும், கேப்டனாகவும் இந்திய டெஸ்ட் அணியின் மையமாக ரோகித் இருந்து வருகிறார். அத்துடன் ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் கடந்த ஆண்டு சொந்த மண்ணில் நடந்த 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் சிறப்பாக ரன் எடுத்தார். அவர் 120-க்கும் அதிகமான ஸ்ட்ரைக்-ரேட்டில் 597 ரன்கள் எடுத்து இருந்தார். 

2019 ஆம் ஆண்டு முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் 35 போட்டிகளில் 2552 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிகரமான பேட்டராகவும் இருந்துள்ளார். 2023-25 ​​சுழற்சியில் 7 போட்டிகளில், ரோகித் மூன்று சதங்கள் மற்றும் அரைசதங்களுடன் 700 ரன்களைக் குவித்துள்ளார்.

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி மற்றும் அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றில் ரோகித் தொடர்ந்து இந்தியாவை வழிநடத்துவார் என்று பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா சமீபத்தில் உறுதிப்படுத்தினார். ரோகித்தின் அடுத்த பணி, செப்டம்பர் 19 ஆம் தேதி சென்னையில் தொடங்கும் வங்கதேச அணிக்கு எதிரான சொந்த மண்ணில் இந்தியா ஆடும் முதல் டெஸ்ட் ஆகும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Rohit Sharma Indian Cricket Team Bcci
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment