worldcup 2023 | indian-cricket-team | rohit-sharma: கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவராக ரோகித் சர்மா இருந்து வருகிறார். ஆனால் அவர் இந்தியாவின் கேப்டனாக நியமிக்கப்பட்டதிலிருந்து, தனது ஆக்ரோஷமான மற்றும் களத்தில் சட்டென கோபத்தை வெளிப்படுத்தும் கேப்டனாக அறியப்படுகிறார். இருப்பினும், அவரது இந்த குணம் அணியில் உள்ள வீரர்கள் உத்வேகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
அவரது கேப்டன்சியில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றாக, தனது வீரர்களுக்கு எப்படியான நெருக்கடியான சூழ்நிலையிலும் அவர் ஆதரவளிக்கத் தயாராக இருப்பது பார்க்கப்படுகிறது. அவர் தனது தந்திரமான செயல்களுக்காகவும் விரைவான முடிவுகளை எடுக்கும் திறனுக்காகவும் ரசிகர்களால் பாராட்டப்படுகிறார். அவரது ஆன்-பீல்டு குணங்களுக்கு மேலதிகமாக, அவரது தலைமைத்துவம் மற்றும் அணியை மேலாண்மை செய்யும் திறன்களுக்காகவும் பாராட்டப்படுகிறார்.
இது இந்திய அணிக்குள் ஒரு நேர்மறையான மற்றும் ஆதரவான சூழலை உருவாக்கியுள்ளது. வீரர்கள் சிறப்பாக செயல்படுவதற்கு ஏதுவாக உள்ளது. குறிப்பாக, இந்திய மண்ணில் நடந்து வரும் ஒருநாள் உலகக் கோப்பையில் அவரது தலைமையிலான அணி பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இதுவரை விளையாடி 5 போட்டிகளிலும் வெற்றியை ருசித்து எதிராணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார்கள்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உடனான சமீபத்திய உரையாடலில், ரோகித் சர்மா ஒரு கேப்டன் மற்றும் தலைவனாக இருப்பது மற்றும் அணியில் உள்ள அனைவரையும் எவ்வாறு நிர்வகிக்கிறார் என்பது பற்றிய தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Rohit Sharma on how he is managing Team India during ODI World Cup
ரோகித் சர்மா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு பிரத்தியேகமாக அளித்த பேட்டியில் கூறி இருப்பது பின்வருமாறு:-
வீரர்களை நிர்வகித்தல் என்று வரும்போது, நீங்கள் முதலில் தனிநபரைப் புரிந்துகொள்வது மற்றும் அவர்களின் தேவைகள், அந்த குறிப்பிட்ட நபரின் விருப்பு வெறுப்புகள் என்ன என்பதை நீங்கள் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். ஏனெனில் ஒரு குழு விளையாட்டில் அது ஒன்று அல்லது இரண்டு நபர்கள் அல்லது சிலரைப் பற்றியது அல்ல. ஒவ்வொரு நபரையும் பற்றியது. மொத்தமாக இது அனைவரையும் பற்றியது.
நீங்கள் சாம்பியன்ஷிப் மற்றும் பெரிய போட்டிகளை வெல்ல விரும்பினால், அனைவரும் சிறப்பாக செயல்பட்டு வந்து தங்களது பங்கை ஆற்ற வேண்டும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். எனவே, நீங்கள் அனைவரையும் நல்ல மனநிலையில் வைத்திருப்பது முக்கியம். ஒவ்வொருவரும் சொல்வதைக் கேட்பது, அவர்கள் என்ன விரும்புகிறார்கள், அவர்கள் எவ்வாறு செயல்பட விரும்புகிறார்கள் மற்றும் அது போன்ற விஷயங்களைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். பின்னர் நீங்கள் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு முன்னேறிச் செல்வது நான் எப்போதும் செய்யும் ஒன்றுதான். நான் அவர்களின் இடத்தில் என்னை வைத்துப் பார்க்க முயற்சிக்கிறேன். மேலும் இந்த நபருக்கு இப்போது என்ன தேவை என்று யோசிக்கிறேன்.
எனவே, அப்படி நினைப்பது முக்கியம், அதிர்ஷ்டவசமாக, என்னைச் சுற்றி நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்; வீரர்கள், துணை ஊழியர்கள் அணி, வீரர்கள் மற்றும் அனைவரின் தேவையின் அடிப்படையில் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். எனவே, இது எனக்கு இயல்பாக வரும் என்று நான் சொல்லமாட்டேன். பல ஆண்டுகளாக நான் அதைக் கற்றுக்கொண்டேன். எனது தனிப்பட்ட அனுபவங்களைக் கடந்து, ஒரு அணி வெற்றிபெற என்ன தேவை என்பதைப் புரிந்துகொண்டேன். ஒவ்வொருவருடைய தேவையையும், அவர்களின் தேவையையும் புரிந்துகொண்டு, அந்த இடத்தையும் சுதந்திரத்தையும் அவர்களுக்கு வழங்குவதுதான் வெற்றியடைய வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் இது சில சமயங்களில் மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும். ஏனெனில் நீங்கள் ஒரு முக்கிய போட்டியில் விளையாடும் போது, சில சமயங்களில் அழுத்தம் உங்களுக்கு வரலாம்.
எனவே, ஒரு குழுவாக ஒன்றாக இருப்பது முக்கியம், ஒவ்வொருவரும் அந்த நல்ல நிலையில் என்னவாக இருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு, அவர்கள் வெளியே வந்து சுதந்திரமாக அவர்களின் ஆட்டத்தை வெளிபடுத்தலாம். வெளியில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி கவலைப்பட கூடாது.
இவ்வாறு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“