Advertisment

முதல் சூப்பர் ஓவரில் 'ரிட்டயர்டு - அவுட்'; 2வது சூப்பர் ஓவரிலும் பேட்டிங் செய்த ரோகித்: இது சரியா? விதிகள் சொல்வது என்ன?

இந்திய அணிக்காக முதல் சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்த கேப்டன் ரோகித் இரண்டாவது சூப்பர் ஓவரிலும் பேட்டிங் செய்ய வந்தது கிரிக்கெட் வட்டாரத்தில் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.

author-image
WebDesk
New Update
Rohit Sharma retired out super over controversy what rules state Tamil News

சூப்பர் ஓவர்களில் பேட்டிங் செய்வது பற்றி மேரிலேபோன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி) விதிகள் என்ன கூறுகிறது என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Rohit Sharma | India vs Afghanistan: இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3வது டி20 போட்டி பெங்களூருவில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது. 

Advertisment

இந்திய அணி தரப்பில் தனது 5 டி20 சதத்தை விளாசி சாதனை படைத்த கேப்டன் ரோகித் 121 ரன்கள் குவித்தார். அவருடன் மிகச்சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்த ரிங்கு சிங் 69 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 213 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்து போட்டியை டிரா செய்தது. இதனால் வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.

அதன்படி, முதல் சூப்பர் ஓவரின்போது இரு அணிகளுமே 16 ரன்களை எடுத்ததால் 2-வது சூப்பர் ஓவருக்கு போட்டி நகர்ந்தது. அந்த நேரத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 11 ரன்களை மட்டுமே எடுக்க 12 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு ஆப்கானிஸ்தானுக்கு நிர்ணயிக்கப்பட்டது. அப்போது, ஆப்கானிஸ்தான் அணி முதல் மூன்று பந்திகளிலேயே இரண்டு விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி வெற்றியைப் பெற்றது. 

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், இந்தியா ஏற்கனவே நடந்த 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய நிலையில், 3வது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றி ஆப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது. இந்நிலையில், இந்திய அணிக்காக முதல் சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்த கேப்டன் ரோகித் இரண்டாவது சூப்பர் ஓவரிலும் பேட்டிங் செய்ய வந்தது கிரிக்கெட் வட்டாரத்தில் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. 

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான சூப்பர் ஓவர் போட்டியில் என்ன நடந்தது?

இந்திய அணியின் முன்னணி ரன் குவிப்பவராக இருந்ததால், கேப்டன் ரோகித் முதல் சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்ய தொடக்க வீரர் ஜெய்ஸ்வாலுடன் களமிறங்கினார். இருப்பினும், கடைசி பந்திற்கு முன், அதாவது இந்திய அணி வெற்றி பெற இரண்டு ரன்கள் தேவைப்படும் போது, ரோகித் ரிங்கு சிங்கை நான்-ஸ்டிரைக்கரில் கொண்டு வர அவர் தானாக களத்தில் இருந்து வெளியேறினார். போட்டி மற்றொரு சூப்பர் ஓவருக்குச் சென்றபோது, ​​ரோகித் மீண்டும் ரிங்கு சிங்குடன் பேட்டிங் செய்யத் திரும்பினார்.

சூப்பர் ஓவர்களில் பேட்டிங் செய்வது பற்றி மேரிலேபோன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி) விதிகள் என்ன சொல்கிறது?

விதி 25.4.2: நோய், காயம் அல்லது வேறு ஏதேனும் தவிர்க்க முடியாத காரணத்தால் ஒரு பேட்டர் ஓய்வு பெற்றால், அந்த பேட்டர் தனது இன்னிங்ஸை மீண்டும் தொடங்க உரிமை உண்டு. எந்த காரணத்திற்காகவும் இது நடக்கவில்லை என்றால், அந்த பேட்டர் 'ரிட்டயர்டு - நாட் அவுட்' என்று பதிவு செய்யப்பட வேண்டும்.

விதி 25.4.3: விதி 25.4.2 இல் இருந்ததைத் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் ஒரு பேட்டர் ஓய்வு பெற்றால், அந்த பேட்டர் எதிரணி கேப்டனின் ஒப்புதலுடன் மட்டுமே மீண்டும் பேட்டிங் செய்ய களமிறங்க வேண்டும். எந்த காரணத்திற்காகவும் அவர் இன்னிங்ஸ் தொடரவில்லை என்றால், அந்த பேட்டர் 'ரிட்டயர்டு - அவுட்' என்று பதிவு செய்யப்பட வேண்டும்.

மற்றொரு சூப்பர் ஓவரைப் பொறுத்தவரை, முந்தைய சூப்பர் ஓவரில் ஆட்டமிழந்த எந்த பேட்ஸ்மேனும் அடுத்தடுத்த சூப்பர் ஓவரில் பேட் செய்யத் தகுதியற்றவர் ஆகிறார். 

சூப்பர் ஓவர்களில் பேட்டிங் செய்வது பற்றி ஐ.சி.சி விதிகள் என்ன சொல்கிறது?

ஐ.சி.சி-யின்நிபந்தனைகளின்படி, மற்றொரு சூப்பர் ஓவரில், "முந்தைய சூப்பர் ஓவரில் ஆட்டமிழந்த எந்த பேட்ஸ்மேனும் அடுத்தடுத்த சூப்பர் ஓவரில் பேட் செய்யத் தகுதியற்றவர்." என்று கூறுகிறது. 

கேப்டன் ரோகித்த்தைப் பொறுத்தவரை, அவர் முதலாவது சூப்பர் ஓவரில் ஓய்வு பெற்றாரா அல்லது காயம் அடைந்தாரா என்பதை போட்டி நடுவர்கள் தெளிவுபடுத்தவில்லை. தவிர, முதல் சூப்பர் ஓவரில் ரோகித் அவுட் ஆகாததால், மற்றொரு சூப்பர் ஓவரில் மீண்டும் பேட்டிங் செய்ய அவர் தகுதி பெற்றிருப்பார்.

ஆங்கிலத்தில் படிக்கவும்: Rohit Sharma bats in 2nd Super Over after retiring out in 1st. Is that legal? Here’s what rules say

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Rohit Sharma India Vs Afghanistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment