ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையே பெர்த்தில் வெள்ளிக்கிழமை தொடங்கும் முதல் பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்டில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா விளையாட மாட்டார், ஏனெனில், இந்த வார தொடக்கத்தில் அவருடைய மனைவிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. அதனால், தனது மனைவியுடன் அதிக நேரம் செலவிட தேவை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் தெரிவித்தார். ரோஹித் சர்மா இல்லாத நிலையில் அணியின் துணைக் கேப்டனாக இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாகப் பொறுப்பேற்பார். டிசம்பர் 6-ம் தேதி அடிலெய்டில் தொடங்கும் இரண்டாவது போட்டியான பிங்க்-பால் டெஸ்டில் ரோஹித் சர்மா விளையாட உள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்க: Rohit Sharma to miss first Test against Australia; Jasprit Bumrah to captain in Perth
ரோஹித் இல்லாததால், இந்திய ஏ அணியுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த தேவ்தத் படிக்கல்லை ஆஸ்திரேலியாவில் இருக்கும்படி தேர்வாளர்கள் கூறியுள்ளனர். பெர்த்தில் உள்ள ஓபஸ் ஸ்டேடியத்தில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித்துக்கு பதிலாக 18 பேர் கொண்ட அணியில் படிக்கல் சேர்க்கப்படுவார்.
"அவர் (ரோஹித்) பயணம் செய்வார் என்று நாங்கள் நம்பினோம், ஆனால், அவருக்கு இன்னும் சிறிது நேரம் தேவைப்படுவதால் இப்போது செல்ல முடியாது என்று பி.சி.சி.ஐ-க்கு அவர் தெரிவித்தார். அடிலெய்டில் நடைபெறும் இரண்டாவது போட்டியான பிங்க்-பால் டெஸ்ட் போட்டிக்காக அவர் ஆஸ்திரேலியாவுக்கு செல்கிறார். முதல் மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டிகளுக்கு இடையே 9 நாட்கள் இடைவெளி உள்ளது, எனவே ரோஹித் சரியான நேரத்தில் அங்கு வர முடியும்” என்று பி.சி.சி.ஐ அதிகாரி உறுதிப்படுத்தினார்.
பெர்த், அடிலெய்டு, பிரிஸ்பேன், மெல்போர்ன் மற்றும் சிட்னி ஆகிய இடங்களில் நடைபெறும் கோடைக்கால போட்டிகளின் முதல் டெஸ்ட் போட்டிக்காக கேப்டன் ரோஹித் ஆஸ்திரேலியாவுக்குச் செல்வதாக மூத்த தேர்வுக் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்திய அணியை சொந்த மைதானத்தில் நியூசிலாந்து 0-3 என ஒயிட்வாஷ் செய்யப்பட்டதால், ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் சுற்றுப்பயணம் மோசமான பார்ம் மற்றும் கூட்டு பேட்டிங் தோல்வியிலிருந்து மீள்வதற்கான ஒரு சோதனையாக இருக்கும்.
கே.எல். ராகுல் விளையாடுவார்
சனிக்கிழமையன்று மேட்ச் சிமுலேஷனின் போது ஃபீல்டிங் செய்யும் போது ஷுப்மான் கில் கட்டை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், இந்தியாவின் பேட்டிங் வரிசை நிச்சயமாக மாற்றங்களைக் காண உள்ளது. கில் முதல் டெஸ்டில் விளையாடமாட்டார், கே.எல்.ராகுல் விளையாடும் லெவன் அணியில் இடம் பெறுவதற்கான பாதையைத் திறக்கிறார். ரோஹித் இல்லாத நிலையில், விக்கெட் கீப்பரான துருவ் ஜூரல் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே இருக்கலாம். ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான சுற்றுப்பயண ஆட்டத்தில் ஜூரல் 80 மற்றும் 64 ரன்கள் எடுத்தார், கிரீஸில் மிகவும் உறுதியான பேட்ஸ்மேனாக விளையாடினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.