இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் செவ்வாய்க் கிழமை காலை நடைபெறவுள்ள ரஞ்சிக் கோப்பைக்கான பயிற்சி அமர்வுக்கு வரப்போவதாக மும்பை அணி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.
அவர் வரவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராகும் விதமாக மும்பை கிரிக்கெட் சங்க மைதானத்தில் தனது பயிற்சியை மீண்டும் தொடங்கியுள்ளார். மும்பை அணி ஜம்மு மற்றும் காஷ்மீர் அணிக்கு எதிராக மும்பையில் நடைபெறவுள்ள ரஞ்சி டிராபி லீக் சுற்றுக்கு சென்டர்-விக்கெட் பயிற்சி அமர்வை பயன்படுத்த உள்ளது. இந்தப் போட்டியில் களமிறங்குவது பற்றி ரோகித் இன்னும் விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும், ரஞ்சி டிராபி லீக் ஆட்டத்தில் விளையாடலாமா வேண்டாமா என்று இன்னும் அவர் யோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Rohit Sharma to turn up for Mumbai Ranji Trophy practice on Tuesday
இது தொடர்பாக மும்பை கிரிக்கெட் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கையில், "ரோகித் மும்பை ரஞ்சி டிராபி அணியுடன் பயிற்சி அமர்வுகளுக்கு வருவார். மேலும் அவர் ஜம்மு மற்றும் காஷ்மீர் அணிக்கு எதிராக அடுத்த ரஞ்சி டிராபி ஆட்டத்தில் விளையாடுவாரா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதுகுறித்து அவர் சரியான நேரத்தில் அறிவிப்பார், ”என்று கூறுகின்றனர். மும்பை அணிக்காக ரோகித் டைசியாக 2015 இல் உத்தரபிரதேசத்திற்கு எதிராக விளையாடினார்.
ரோகித், அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்ற நிலையில், அவர் ஆடிய 3டெஸ்ட் போட்டிகளில் 3,9, 10, 3, 6 என ரன்கள் எடுத்தார். மேலும், அவரின் சராசரி 10.93 என பெரும் பின்னடைவைச் சந்தித்தார். இதனால், சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு செய்தார்.
முன்னதாக இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், அனைத்து வீரர்களும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவதை தான் விரும்புவதாக கூறியிருந்தார். “எல்லோரும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று நான் எப்போதும் விரும்புகிறேன். அந்த அளவுக்கு உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒரு விளையாட்டு மட்டுமல்ல, சிவப்பு-பந்து கிரிக்கெட் விளையாட அர்ப்பணிப்பு இருந்தால், அனைவரும் உள்நாட்டு கிரிக்கெட்டை விளையாட வேண்டும். இது பெறக்கூடிய அளவுக்கு எளிமையானது. உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்காவிட்டால், டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் விரும்பும் வீரர்களை நீங்கள் பெறமாட்டீர்கள், ”என்று சிட்னியில் இந்தியாவின் டெஸ்ட் தொடர் தோல்விக்குப் பிறகு கம்பீர் கூறினார்.
மீதமுள்ள ரஞ்சி டிராபி போட்டிகள் ஜனவரி 23 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் விராட் கோலியும் டெல்லிக்கு ஆடுவார் என்பதைப் பார்க்க சுவாரசியமாக இருக்கும். கோலி அந்த அணிக்காக கடைசியாக 2012 இல் ஆடினார். பி.சி.சி.ஐ அதன் வீரர்களை உள்நாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்க அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அதன் ஒப்பந்த வீரர்களுக்கு அது கட்டாயமாக்கப்படவில்லை.
பஞ்சாப் அணியில் கில்
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனான சுப்மன் கில் கர்நாடகாவுக்கு எதிராக பஞ்சாப் அணிக்காக விளையாடுவார் என்பதை இந்தியன் எக்ஸ்பிரஸ் புரிந்துகொள்கிறது.ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் கில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. மூன்று டெஸ்ட் போட்டிகளில் அவரது ஸ்கோர் 31, 28, 1, 20 மற்றும் 13 ஆக இருந்தது. இதனால், அவர் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டார்.