ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 23 வயதான இந்திய இளம்வீரர் அர்ஷ்தீப் சிங், பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலியின் கேட்ச்-ஐ தவறவிட்டார்.
ஆட்டத்தின் முக்கியமான 18ஆவது ஓவரில் இந்நிகழ்வு நடந்தது. தொடர்ந்து, ஆசிப் அலி அடுத்த ஓவரிலே ஆட்டத்தை தன் பக்கம் திருப்பினார்.
இதற்கிடையில் அடுத்த இலங்கைக்கு எதிரான அடுத்த ஆட்டத்திலும் அர்ஷ்தீப் சிங் நெருக்கடியை எதிர்கொண்டார். ஆட்டத்தின் 19ஆவது ஒவரில் அனுபவ வீரரான புவனேஸ் குமார் அதிகபடியான ரன்களை விட்டுக்கொடுத்தார்.
இதனால் கடைசி ஓவரில் இலங்கையின் வெற்றிக்கு 6 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இந்த ஆட்டத்தில் அர்ஷ்தீப் சிங் நான்கு யார்க்கர்களை வீசினார்.
எனினும் கடைசி நேரத்தில் இலங்கை வெற்றி பெற்றது.
முன்னதாக, இக்கட்டான நிலையில் கேப்டன் ரோகித் சர்மாவிடம் ஆலோசனை கேட்க அர்ஷ்தீப் சிங் செல்வார். அப்போது ரோகித் முதுகை திருப்பிக் கொள்வார்.
இந்த வீடியோ காட்சிகள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளன.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் போது பாகிஸ்தான் ரசிகர்கள் அர்ஷ்தீப் சிங்கை மோசமாக ஈவு இரக்கமின்றி சமூக வலைதளங்களில் பயங்கரவாத அமைப்பு ஒன்றின் பெயரை கூறி தாக்கினர்.
அதற்கு அடுத்த போட்டியில் ரோகித் சர்மாவும் அர்ஷ்தீப் சிங்குக்கு முதுகை காட்டி திரும்பியுள்ளார். இந்த காணொலி காட்சியில் பலரும் ரோகித் சர்மாவுக்கு எதிராக கருத்து பதிவிட்டுவருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil