/tamil-ie/media/media_files/uploads/2018/09/D374.jpg)
MRF ICC ODI RANKINGS
ஐசிசி ஒருநாள் தரவரிசை: ஐசிசி இன்று வெளியிட்டுள்ள சிறந்த ஒருநாள் வீரர்களுக்கான தரவரிசையில், ரோஹித் ஷர்மா இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
எம்ஆர்எஃப் டயர்ஸ் ஐசிசி ஒருநாள் தரவரிசை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி 884 ரேட்டிங்குடன் முதலிடத்தில் உள்ளார். ஆசிய கோப்பை தொடருக்கு தலைமை தாங்கிய ரோஹித் ஷர்மா இரண்டு இடங்கள் முன்னேறி 842 ரேட்டிங்குடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
ஆசிய கோப்பைத் தொடரில், ஐந்து ஆட்டங்களில் ரோஹித் ஷர்மா 317 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் ஒரு சதமும், இரண்டு அரைசதமும் அடங்கும். அவரது பேட்டிங் ஆவரேஜ் 105.66.
அதேபோல், மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான் நான்கு இடங்கள் முன்னேறி, 802 ரேட்டிங்குடன் ஐந்தாவது இடம் பிடித்திருக்கிறார். ஆசிய கோப்பை தொடரில், இரண்டு சதங்களுடன் தவான் 342 ரன்கள் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், பந்து வீச்சாளர்கள் தரவரிசையில், இந்தியாவின் பும்ரா 797 ரேட்டிங்குடன் முதலிடத்திலும், ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் 788 ரேட்டிங்குடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். மேலும், இந்தியாவின் குல்தீப் யாதவ் மூன்று இடங்கள் முன்னேறி 700 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். இதுதான் அவரது கரியரில் சிறந்த தரநிலையாகும்.
ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் ரஷித் கான் முதலிடத்தில் உள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.