இலங்கை மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இதில், 3 டி20 போட்டிகள் ஜூலை 28, 29, 31 ஆகிய தேதிகளில் பல்லேகல நகரில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதேபோல், 3 ஒருநாள் போட்டிகள் ஆகஸ்ட் 2, 4, 7 ஆகிய தேதிகளில் கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடக்க உள்ளது.
இந்நிலையில், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பி.சி.சி.ஐ) தெரிவித்துள்ளனர். நாளை வெள்ளிக்கிழமை கொழும்புவில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐ.சி.சி வருடாந்திர மாநாட்டில் பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா இலங்கைக்கு பறந்துள்ளதால், பி.சி.சி.ஐ-யின் மூத்த தேர்வுக் குழு ஜூம் வீடியோ கால் மூலம் இன்று வியாழக்கிழமை மாலை கூட்டம் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பி.சி.சி.ஐ-யுடன் கலந்தாலோசித்த அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு, இறுதியாக மூன்று போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய டி20 அணியை சூரியகுமார் யாதவ் வழிநடத்துவார் என்றும், ஒருநாள் போட்டிகளில் ரோகித் தொடர்ந்து இந்திய அணியை வழிநடத்துவார் என்றும் முடிவு செய்துள்ளது. அவரது கடந்தகால உடற்தகுதியைக் கருத்தில் கொண்டு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிக்க வேண்டுமா என்று தேர்வாளர்களுக்கு உறுதியாகத் தெரியாததால், டி20 போட்டிகளில் சூரியகுமார் அணிக்கு கேப்டனாக நியமிக்கும் முடிவை எடுத்தாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிந்துள்ளது. ஹர்திக் பாண்டியா டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் துணைக் கேப்டனாக இருந்தார்.
இந்த தொடரில் சூரியகுமாரின் செயல்பாடு திருப்திகரமாக இல்லாவிட்டாலும், எதிர்பார்ப்புகளை அவர் பூர்த்தி செய்யவில்லை என்றாலும், எதிர்காலத்தில் அவரை கேப்டனாக நியமிக்க தயாராக இருப்பதாக தேர்வுக் குழு பி.சி.சி.ஐ-க்கு தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியை சூர்யகுமாரை வழிநடத்த பி.சி.சி.ஐ கண்காணித்து வருகிறது.
ஹர்திக் பாண்டியா கேப்டனாக முன்னோடியாகத் தோன்றினாலும், பி.சி.சி.ஐ தலைவர்கள் மற்றும் தேர்வாளர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான தங்கள் திட்டங்களை ஹர்திக் பாண்டியாவிடம் விளக்கியுள்ளார்கள். மேலும், அவர்கள் ஏன் சூரியகுமாரை விரும்புகிறார்கள் என்பது பற்றியும் அவரிடம் கூறியுள்ளார்கள்.
ஒருநாள் போட்டிக்கு மூத்த வீரர்கள்
இதற்கிடையில், புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பயிற்சியாளராக இருக்கும் முதல் தொடர் என்பதால், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்ற கோரிக்கையை அணியில் உள்ள மூத்த வீரர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஹ்ர்திக் பாண்டியா, டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் மற்றும் ஒருநாள் அணியில் இடம்பெற மாட்டார். இதேபோல், மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை தேர்வு செய்ய வேண்டாம் என்று மூத்த தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது. மேலும் அவருக்கு டி20 தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட உள்ளது. இரண்டு இந்திய அணிகளிலும் ரிஷப் பண்ட் இடம்பெறுவார் எனத் தெரிகிறது.
மிடில்-ஆர்டரில் ரியான் பராக்
ராஜஸ்தான் ராயல்ஸ் மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேன் ரியான் பராக் இந்திய மிடில்-ஆர்டர் இடத்தை பிடிக்க உள்ளார். மேலும் அவர் ஒருநாள் மற்றும் டி20 அணிக்கும் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது என்பதை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் புரிந்துகொள்கிறது. தேர்வுக் குழு எதிர்காலத்திற்காக புதிய முகங்களை முயற்சித்து வருகிறது. மேலும் பந்துவீசக்கூடிய பராக் இரண்டு அணிகளிலும் ஒரு இடத்தைப் பெற வாய்ப்புள்ளது. பராக் சேர்ப்பதால் சூரியகுமார் ஒருநாள் அணியில் இடம்பெற வாய்ப்பில்லை. மேலும் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டி20 அணியில் மட்டுமே இடம்பெறுவார் என்றும் அறிய முடிகிறது.
ஐசிசி உலகக் கோப்பை 50 ஓவர் அணியில் கடைசியாக இடம்பிடித்த ஷ்ரேயாஸ் ஐயர், இந்திய ஒருநாள் அணியில் மீண்டும் களமிறங்க இருக்கிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் அவர் மீது பி.சி.சி.ஐ கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியது. மேலும், அவரது பெயர் வருடாந்திர ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டது. இருப்பினும், சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பியதன் மூலம், பி.சி.சி.ஐ-யின் வருடாந்திர ஒப்பந்தத்தில் விரைவில் இடம் பெற உள்ளார். ஹர்திக் பாண்டியா ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகும் நிலையில், மும்பை ஆல்ரவுண்டர் சிவம் துபே இரு அணிகளிலும் இடம்பெற வாய்ப்புள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.