Advertisment

சுப்மன் கில்-ஐ வளர்த்து விடுவதில் 2 முக்கிய வீரர்கள் தீவிரம்: இவங்கதான்யா ஹீரோ!

'கில்லை இன்னும் வளர்த்தெடுக்க உதவுவதில் நான் ஆர்வமாக உள்ளேன்' என்று முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

author-image
WebDesk
Jun 08, 2023 19:56 IST
Rohit Sharma, Virat Kohli keen to nurture ‘next big thing’ Shubman Gill Tamil News

India's Shubman Gill raises his bat to celebrate scoring a century during the third day of the fourth cricket test match between India and Australia in Ahmedabad. (FILE)

Shubman Gill Tamil News: இந்திய இளம் வீரரான சுப்மன் கில் கடந்த ஒரு வருடத்தில் 3 வடிவத்திலும் சதம் விளாசிய வீரராக வலம் வருகிறார். 2023ல் இந்தியாவுக்காக 17 போட்டிகளில் ஐந்து சதங்களுடன் 980 ரன்கள் குவித்துள்ளார் கில். நடப்பு ஐ.பி.எல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 17 போட்டிகளில் மூன்று சதங்களுடன் 59.33 சராசரியில் 890 ரன்கள் குவித்த அவர் ஆரஞ்சு தொப்பியை வென்றார்.

Advertisment

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் போது பேசிய கேப்டன் ரோகித் சர்மா “சுப்மன் கில் அதிக திறன் பெற்றுள்ளார். என் மனதில் சந்தேகம் இல்லாமல், இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் அவர் தான்.

publive-image

இந்த நிலையில் வெற்றி பெற தேவையான அனைத்தையும் அவர் பெற்றுள்ளார். இந்த நல்ல ஃபார்மில் அவர் தொடர்வார் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

கேப்டன் ரோகித் இளம் வீரர் கில்லை புகழ்ந்து பேசிய நிலையில், அவரது நீண்ட கால சக வீரரும், கில்லின் முன்மாதிரியுமான கோலி தனது 15 ஆண்டுகால கிரிக்கெட்டில் பெற்ற அனைத்து அறிவையும் கொண்டு அவருக்கு உதவ விரும்புகிறார்.

"நான் தரவரிசையில் முன்னேறும் போது அவர் எனது கிரிக்கெட் வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டதாக அவர் என்னிடம் கூறினார். அவர் விளையாட்டைப் பற்றி என்னிடம் நிறைய பேசுகிறார். மேலும் அவரை இன்னும் வளர்த்தெடுக்க உதவுவதில் நான் ஆர்வமாக உள்ளேன்" என்று கோலி கூறினார்.

publive-image

கில்லின் கவர் டிரைவ் கோலியின் கவர் டிரைவுடன் ஒரு விசித்திரமான ஒற்றுமையைக் கொண்டுள்ளது. அதை அவரும் முழுமையாக அறிந்திருக்கிறார். ‘விராட்டியன்ஸ்’ என்று அழைக்கப்படும் கோலியின் ரசிகர்கள் அவரை ‘கிங்’ கோலி என்று அழைக்கிறார்கள். இப்போது அவரது வாரிசான கில்லை ‘பிரின்ஸ்’ என்று அவர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார்.

"கிங் மற்றும் பிரின்ஸ் இந்த செல்லப்பெயர் அனைத்தும் ரசிகர்களுக்கு சிறந்தவை. ஆனால் எந்தவொரு மூத்த கிரிக்கெட் வீரரின் பணியும் எந்தவொரு இளம் வீரருக்கும் உதவுவதும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அனுபவித்த நுண்ணறிவை அவர்களுக்கு வழங்குவதும் ஆகும். இதனால் அவர்களால் ஏற்ற தாழ்வுகளை நிர்வகிக்க முடியும்.

அவர் ஒரு அழகான இளம் வீரர். அவர் அற்புதமாக விளையாடுகிறார், இந்த (நடக்கும் டெஸ்ட் போட்டியிலும்) அவர் அதைத் தொடர விரும்புகிறேன்." என்று கோலி கூறினார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

#Cricket #Rohit Sharma #Sports #India Vs Australia #Shubman Gill #Indian Cricket #Virat Kohli #World Test Championship #Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment