இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 104.5 ஓவர்களில் 353 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்தியா 307 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து, 46 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி இந்தியாவின் சுழலைத் தாக்குப்பிடிக்க முடியாமல், 53.5 ஓவர்கள் விளையாடி 145 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன் மூலம், இந்திய அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 8 ஓவர்களில் 40 ரன்கள் எடுத்துள்ளது.
இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே 4வது டெஸ்ட் போட்டியில், 3வது நாள் ஆட்டத்தின்போது, இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர் சர்பராஸ் கானை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா எச்சரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்போது நடுவர் குமார் தர்மசேனா தலையிட்டு பேசியதும் தெரிய வந்துள்ளது.
ரோஹித் சர்மா, “ஓயே, ஹீரோ நஹி பன்னே கா” (ஹீரோவாக இருக்க முயற்சிக்காதே) என்று கூறி எச்சரித்தார். இந்த வீடியோதான் சமூக வலைதளங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது. வீடியோ சமூக வலைதளங்கள் வைரலாகி வரும் நிலையில், உண்மையில் களத்தில் அப்போது என்ன நடந்தது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 142/8 என்ற நிலையில் பேட்டிங் செய்துகொண்டிருந்தது. அப்போது 47-வது ஓவரை வீசிய குல்தீப் யாதவ் போக்ஸூக்கு எதிராக ஒரு ரன்னை விட்டுக்கொடுத்த பிறகு ஷோயப் பஷீர் ஸ்டிரைக்கிற்கு வந்தார்.
அப்போது 5வது பந்தை வீசுவதற்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, இங்கிலாந்து பேட்டர் ஷோயப் பஷீருக்கு நெருக்கமாக பீல்ட் செட்டிங்கை மாற்றினார். பஷீருக்கு அருகில் ஷார்ட் லெக் பீல்டிங்கில் நிற்க சர்பராஸ் வந்த போது அவர் ஹெல்மெட்டை அணியாமல், குல்தீப் யாதவ்விடம் பந்துவீசுமாறு கேட்டுக்கொண்டார்.
Rohit Sharma is absolutely right, safety should be the first priority
— Richard Kettleborough (@RichKettle07) February 25, 2024
Rohit to Sarfaraz:- Don't try be a hero, wear a helmet 🪖#INDvENG #RohitSharma #INDvsENG #SarfarazKhan #KuldeepYadav #DhruvJurel #Ashwin pic.twitter.com/yhlo3LRWbz
சர்பராஸ் கான் ஷார்ட் லெக் பீல்டிங்கில் ஹெல்மெட் அணியாமல் நெருக்கமாக பீல்ட் செயய் வந்த போது, ரோஹித் சர்மா அவரை, “பொறு ஹெல்மெட் வந்துவிடும்” என தடுத்தார்.
நேரமாகிவிடும் என்பதால், சர்பராஸ் கான், “பரவாயில்லை இரண்டு பந்துகள்தானே” என்று ரோஹித் சர்மாவை சமாதனம் செய்ய முயன்றார்.
அப்போது கத்திக்கொண்டே சர்பராஸ் கான் அருகில் வந்த ரோஹித் சர்மா, “ஹீரோவாக இருக்க முயற்சிக்காதே, முதலில் ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு பீல்டிங் செய்” என்று அக்கரையோடு அவருடைய பாணியில் எச்சரிக்கை செய்தார்.
அதே சமயம் நடுவர் குமார் தர்மசேனா, “இல்லை, உங்களால் அதைச் செய்ய முடியாது” என்று கூறி, நெருக்கமான இடங்களில் பீல்டிங் செய்யும் போது ஹெல்மெட் கட்டாயம் என்று தெரிவித்தார்.
பின்னர் ஹெல்மெட் வந்தபிறகு சர்பராஸ் கான் பீல்டிங் செய்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.