Advertisment

'அடுத்த சீசன் ரோகித் மும்பைக்கு ஆட மாட்டார்': அடித்துச் சொல்லும் மாஜி வீரர்

ரோகித் சர்மா ஐ.பி.எல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2025 சீசனில் விளையாட மாட்டார் என்று முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Rohit Sharma will not be play for Mumbai Indians in IPL 2025 Aakash Chopra predictions Tamil News

ரோகித் அடுத்த சீசனில் மும்பை அணிக்காக ஆட மாட்டார் என்கிற தகவல் பரவியது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Rohit Sharma | Mumbai Indians: ஐ.பி.எல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தவர் தற்போதைய இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா. இவரது தலைமையிலான மும்பை 5 முறை (2013, 2015, 2019, 2019 மற்றும் 2020) சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. 

Advertisment

மும்பை அணியின் முக்கிய வீரராக இருந்த இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 2022 சீசனில் புதியதாக சேர்க்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்தினார். அவரின் தலைமையிலான குஜராத் தொடக்க சீசனிலே கோப்பையை முத்தமிட்டு அசத்தியது. அதனைத் தொடர்ந்து நடந்த 2023 சீசனில் இறுதிப்போட்டி வரை முன்னேறி சி.எஸ்.கே-விடம் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தது. ஆனாலும், அந்த அணியின் முயற்சி வெகுவாக பாராட்டப்பட்டது. மேலும், ஹர்திக் பாண்டியாவின் மவுசும் கூடிப் போனது. 

இந்த சூழலில் தான், 2024 சீசனுக்கு முன்னதாக நடந்த மினி ஏலத்தில் முன்னாள் வீரர் ஹர்திக் பாண்டியாவை டிரேடு முறையில் வளைத்துப் போட்டது மும்பை நிர்வாகம். அவரோ வந்தால் கேப்டனாகத் தான் வருவேன் என அடம்பிடிக்க, வெற்றிக்கு வழிநடத்திய ரோகித் மும்பை அணியால் ஓரம் கட்டப்பட்டார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 

குஜராத் அணியை பாதியிலே கழற்றி விட்ட ஹர்திக் பாண்டியா அந்த அணியின் ரசிகர்களின் வெறுப்பை சம்பாரித்த நிலையில், ரோகித் சர்மாவின் ரசிகர்களும் அவரை எதிராளியைப் பார்த்தனர். இந்த இரு வீரர்களும் இந்தியாவுக்காக விளையாடினாலும், ஐ.பி.எல் மோகம் இருவரின் ரசிகர் மத்தியில் போர் முரசொலியை கொட்டியது. அதனால், ஹர்திக் எந்த மைதானத்தில் களமிறங்கினாலும் அவருக்கு எதிரான கோஷங்கள் முழுங்கின. பல முன்னாள் வீரர்களின் வேண்டுகோளின் பெயரில், தொடரில் பாதியில் அந்த முழக்கங்கள் கைவிடப்பட்டன. 

ஆனாலும், ஒரு கேப்டனாக ஹர்திக் அவரது அணியை வழிநடத்த தவறினார். லீக் சுற்றில் 14 போட்டிகளில் 4 வெற்றியைப் பெற்ற மும்பை 10 போட்டியில் தோல்வியுற்றது. அத்துடன், சொந்த மைதானத்தில் கூட உதை வாங்கியது. மும்பையின் சரிவுக்கு முக்கிய காரணம் ஹர்திக் தான் என்று அணிக்குள்ளேயே பரவலாக பேசப்பட்டது. அணியின் நட்சத்திர வீரர்கள் ஹர்திக் பாண்டியா கேப்டன்சி மீது கேள்வியை எழுப்பினர். 

இதனிடையே, ரோகித் அடுத்த சீசனில் மும்பை அணிக்காக ஆட மாட்டார் என்கிற தகவல் பரவியது. இது பற்றி அவர் கொல்கத்தா அணி பயிற்சியாளரிடம் கூறியதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2025 சீசனில் விளையாட மாட்டார் என்று முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். 

இதுபற்றி ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் பேசுகையில், "ரோகித் ஷர்மா தனது கடைசிப் போட்டியை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார் என்று நான் நினைக்கிறேன், அவர் தக்கவைக்கப்பட விரும்பாவிட்டாலும் அல்லது அணி அவரை விடுவித்தாலும் அது அவரது  கடைசிப் போட்டியாக இருக்கும். 

எப்படியிருந்தாலும், அவர் அந்த அணியில் இருந்து பிரிந்து செல்வார். மும்பை இந்தியன்ஸ் ஜெர்சியில் ரோகித் சர்மாவை நீங்கள் மீண்டும் பார்க்க மாட்டீர்கள். அது தான் என் புரிதல். நான் தவறாக இருக்கலாம். ஆனால், அடுத்த சீசன் தொடங்கும் போது ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட மாட்டார் என்று நான் உணர்கிறேன்." என்று அவர் கூறினார். 

ரோகித் நடப்பு சீசனில் 32.07 சராசரி மற்றும் 150 ஸ்ட்ரைக் ரேட்டில் 417 ரன்களை எடுத்தார். ஒரு சதம் மற்றும் அரைசதம் அடித்த அடித்த அவர் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 105 ரன்கள் எடுத்தார். தற்போது, வருகிற ஜூன் 2 முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை கேப்டனாக வழிநடத்துகிறார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Rohit Sharma Mumbai Indians
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment