Former India cricketer Wasim Jaffer Tamil News: 7-வது டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கவுள்ள இத்தொடரில், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கின்றன.
முன்னதாக நடந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தொடர்ச்சியாக பெற்ற தோல்விகளால் சூப்பர் 4 சுற்றுடன் வெளியேறியது. இதனையடுத்து, எதிர் வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடுவதில் இந்திய அணி கவனம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில், இந்த உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று முன்தினம் திங்கள் கிழமை அறிவித்தது. இதில், ஆசிய கோப்பை தொடரில் விளையாடிய அதே அணியை இந்தியா பெரும்பாலும் தக்க வைத்துக் கொண்டது. அணியில் புதிய வரவாக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் இணைந்துள்ளனர். வேகப்பந்துவீச்சாளர் காத்திருப்பு பட்டியலில் இடம்பித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடருக்கான இறுதித் தயாரிப்புக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிராக டி-20 தொடரில் பங்கேற்கிறது. சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வருகிற 20 ஆம் முதல் 25 ஆம் தேதி வரையிலும், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் வருகிற 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 11 ஆம் தேதி வரையிலும் நடக்கவுள்ளது. தற்போது இந்த தொடர்களுக்காக இந்திய அணி தயாராகி வருகிறது.
டி20 உலகக் கோப்பை - வாசிம் ஜாஃபர் கருத்து
இதற்கிடையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு குறித்து முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் பல்வேறு விதமான கருத்துக்களை கூறி வருகின்றனர். இதில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் கூறிய கருத்து தற்போது அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகிறது.
வாசிம் ஜாஃபர் டி20 உலகக் கோப்பை இந்திய அணி தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில், கேப்டன் ரோகித் சர்மா தான் களமாடும் தொடக்க ஆட்டக்காரர் இடத்தை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட்க்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்றும், தோனி செயல்பட்டதை போல் அவரும் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் பதிவிட்டு புதிய ஆலோசனையை வழங்கியுள்ளார்.
தற்போது ஒயிட்-பால் கிரிக்கெட்டில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, உலகின் சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவராக வலம் வருகிறார். ஏராளமான ரன்களை குவித்துள்ள அவர் எண்ணற்ற சாதனைகளை முறியடித்துள்ளார். ஆனால், அவர் இந்திய அணியில் ஒரு மிடில்-ஆடர் பேட்ஸ்மேனாகவே தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கி இருந்தார். பின்னர், 2013 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபியில் ஷிகர் தவானுடன் மற்றொரு தொடக்க வீரராக ரோகித்தை களமிறக்கி இருந்தார் முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ் தோனி. அதன் பிறகு நடந்தவை எல்லாம் வரலாறு.
இதேபோல், தற்போது கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா, மிடில்-ஆடரில் களமாடும் பண்டை தான் களமாடும் தொடக்க வீரர் (ஓபனிங் பேட்ஸ்மேன்) இடத்திற்கு ப்ரோமோஷன் செய்ய வேண்டும் என்றும், பண்ட்டுக்காக தனது இடத்தை அவர் விட்டுக்கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர், ரிஷப் பண்ட்க்கு தொடக்க வீரராக தனது இடத்தை கொடுத்துவிட்டு ரோகித் சர்மா 4-வது வரிசையில் விளையாட வேண்டும். கேஎல் ராகுல், பண்ட், விராட் கோலி, ரோகித், சூர்யா குமார் யாதவ் ஆகியோர் தான் டி20 உலக கோப்பை தொடருக்கான தனது டாப் 5 இந்திய வீரர்கள் என்றும் கூறியுள்ளார்.
I still think opening the inns is where we could see the best of Pant in T20. Provided Rohit is ok to bat @ 4. MS took a punt on Rohit before CT in 2013, and the rest is history. Time for Rohit to take a punt on Pant. KL, Pant, VK, Rohit, Sky would be my top five. #INDvAUS #T20WC
— Wasim Jaffer (@WasimJaffer14) September 13, 2022
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.