கிறிஸ்டியானோ ரொனால்டோ தேடும் மூன்று பெண்கள்- யார் அவர்கள்?

Christiano Ronaldo starving kid: ரொனால்டோ, தனது சிறு வயது இயலாமையை தானே முன் வந்து விளக்கியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

By: Updated: September 21, 2019, 03:06:57 PM

சில நாட்களுக்கு முன்பு, பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ  ரொனால்டோ  ஐடிவிக்கு  பேட்டியளித்திருந்தார். அதில், “சிறு வயதில், நான்  கடினமான நேரத்தை தாங்கியவன். ஸ்போர்ட்டிங் லிஸ்பனில் அகாடமி வீரராக இருந்த போது இலவச உணவைத் தேடும் அளவிற்கு வாழ்க்கை கடினமாக இருந்தது” என்று தெரிவித்தார்.

ஸ்டேடியத்திற்கு அடுத்ததாக இருந்த  மெக்டொனால்டு கடையில் ஊழியர்களாக இருந்த மூன்று பெண்கள் எனது பசியை அவ்வப்போது  போக்கினார். இதில் ஒரு பெண்ணின் பெயர் எட்னா என்றும் குறிப்பட்டார். மற்ற இரண்டு பேர்களின் பெயர்கள் நியாபகம் இல்லை” என்று தெரிவித்து இருந்தார்.

 

கால்பந்து விளையாட்டில் பிரபலமான பின்பு இவர்களை பார்க்க முடியவில்லை , செய்த செயல்களுக்கு நன்றி கூற முடியவில்லை. யாரேனும், கண்டுபிடித்தால் தெரியப்படுத்துங்கள் என்று அந்த பேட்டியை முடித்தார். ரொனால்டோ, தனது சிறு வயது இயலாமையை தானே முன் வந்து விளக்கியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்நிலையில், அப்பேட்டியை எடுத்த பியர்ஸ் மோர்கன் ரொனால்டோ  குறிப்பிட்ட எட்னா வை தான் கண்டு பிடித்திவிட்டதாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

இதன் பிறகு, பவுலா லேகா என்ற பெண் ரெனாஸ்கெங்கா  என்ற போர்த்துகீசிய வானொலி நிலையத்தில் தானாக முன் வந்து, ரொனால்டோ சொன்ன மற்ற இரண்டு பெண்களில் தானும் ஒருவர் என்றார்.

இந்நிலையில்,  பியர்ஸ் மோர்கன் தனது ட்விட்டர் பக்கத்தில், ரொனால்டோ தேடும் மற்ற இரண்டு பெண்களில் பவுலா லேகா இல்லை, இன்னும் தேடல் தொடங்கும் என்று  தெரிவித்துள்ளார்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Sports News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Ronaldo starving kid christiano ronaldos childhood edna paula leca mcdonalds ronaldo

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

JUST NOW
X