Ipl 2021, RR vs CSK match highlights in tamil: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு 7:30 மணிக்கு நடந்த 47வது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. சுவாரஷ்யங்களுக்கு பஞ்சமில்லாத இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் – ஃபாஃப் டு பிளெசிஸ் ஜோடி பேட்டிங் செய்ய களமிறங்கினர். அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்த இந்த ஜோடியில், ஃபாஃப் டு பிளெசிஸ் 25 ரன்கள் (19 பந்துகள், 2 பவுண்டரி, 1 சிக்ஸர்) சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து தனது 200 வது ஆட்டத்தில் (சென்னை அணிக்காக) களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 3 ரன்னுடன் நடையை கட்டினார். பின்னர் வந்த மொயீன் அலி 1 சிக்ஸர் 1 பவுண்டரியை விளாசி 21 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து வந்த அம்பதி ராயுடு 2 ரன்னில் ஆட்டமிழ்ந்த நிலையில் சென்னை அணி 16.2 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் சேர்ந்திருந்தது.
இந்த தருணத்தில் அரைசதம் கடந்து களத்தில் இருந்த தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் பின்னர் வந்த ரவீந்திர ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து பவுண்டரி சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர் தனது ரன் வேட்டையை மீண்டும் தொடர்ந்தார். இதற்கிடையில் மறுமுனையில் அவருடன் களத்தில் இருந்த ஜடேஜா 1 சிக்ஸர் 4 பவுண்டரிகளை ஓடவிட்டு 15 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார்.
ஆட்டத்தின் இறுதிவரை தனது அதிரடியை தொடர்ந்து ருதுராஜ் 20 வது ஓவரின் கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்து தனது சதத்தை பூர்த்தி செய்தார். மேலும், அவர் 60 பந்துகளில் 5 சிக்ஸர் 9 பவுண்டரிகளை பறக்க விட்டு 101 ரன்கள் குவித்தார்.
💯 for @Ruutu1331 ! 👏 💛
— IndianPremierLeague (@IPL) October 2, 2021
O. U. T. S. T. A. N. D. I. N. G! 🙌 🙌
The @ChennaiIPL right-hander brings up his maiden #VIVOIPL hundred with a MAXIMUM! 👌 👌 #VIVOIPL #RRvCSK
Follow the match 👉 https://t.co/jo6AKQBhuK pic.twitter.com/kDayzAQd7Y
ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் சேர்த்தது. எனவே ராஜஸ்தான் அணிக்கு 190 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
INNINGS BREAK!
— IndianPremierLeague (@IPL) October 2, 2021
A sensational hundred for @Ruutu1331 🙌
A 3⃣2⃣*-run blitz from @imjadeja 👌
Cameos from @faf1307 & Moeen Ali 👍
3/39 for @rahultewatia02
The #RR chase will commence soon. #VIVOIPL #RRvCSK @ChennaiIPL
Scorecard 👉 https://t.co/jo6AKQBhuK pic.twitter.com/MGtYCcJkGZ
தொடர்ந்து 190 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு வலுவான தொடக்கம் கிடைத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்கார்கள் எவின் லூயிஸ் – யஷாஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி சிக்ஸர் பவுண்டரிகளால் வானவேடிக்கை காட்டியது. இந்த ஜோடியில் அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்த எவின் லூயிஸ் 12 பந்துகளில் 2 சிக்ஸர் 2 பவுண்டரிகளை பறக்க விட்டு 27 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் அந்த அணி பவர் பிளே முடிவில் 1 விக்கெட்டை இழந்து 81 ரன்கள் சேர்த்தது.
மறுமுனையில் 19 பந்துகளில் அரைசதம் கடந்த யஷாஸ்வி ஜெய்ஸ்வால் 60 ரன்கள் ( 21 பந்துகளில், 3 சிக்ஸர் 6 பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் சிவம் துபேவுடன் ஜோடி சேர்ந்தார். 4 பவுண்டரிகளை விரட்டிய கேப்டன் சஞ்சு 28 ரன்னில் அவுட் ஆனார்.
WHAT. A. START! 👌 👌
— IndianPremierLeague (@IPL) October 2, 2021
Jaw-dropping stuff from Jaiswal! 👍 👍#VIVOIPL #RRvCSK
A 19-ball FIFTY for the young @rajasthanroyals opener! 👏 👏
Follow the match 👉 https://t.co/jo6AKQBhuK pic.twitter.com/vgvLbtg6Xh
எனினும், தொடர்ந்து அதிரடியில் மிரட்டிய ராஜஸ்தான் அணி 17.3 வது ஓவரிலேயே நிர்ணயிக்கப்பட்ட 190 ரன்கள் இலக்கை எட்டியது. மேலும் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Sensational run-chase to seal a win! 👌 👌@rajasthanroyals put up a solid show with the bat & beat #CSK by 7⃣ wickets. 👏👏 #VIVOIPL #RRvCSK
— IndianPremierLeague (@IPL) October 2, 2021
Scorecard 👉 https://t.co/dRp6k449yy pic.twitter.com/fbv8zN02Aw
தனது நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிவம் துபே 42 பந்துகளில் 4 சிக்ஸர் 4 பவுண்டரிகளை சிதறவிட்டு 64 ரன்கள் சேர்த்து ஆட்டமிழகாமல் இருந்தார். அவருடன் இலக்கை எட்ட உறுதுணையாக ஆடிய க்ளென் பிலிப்ஸ் 8 பந்துகளில் 1 சிக்ஸர் 1 பவுண்டரியை விளாசி 14 ரன்கள் சேர்த்தார்.
.@IamShivamDube brings up his 5️⃣0️⃣ 👏👏
— IndianPremierLeague (@IPL) October 2, 2021
A power-packed knock from the @rajasthanroyals left-hander 🔥 🔥#VIVOIPL #RRvCSK
Follow the match 👉 https://t.co/dRp6k449yy pic.twitter.com/zhVr1a8hBg
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த அபார வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 6 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அந்த அணி மீதமுள்ள 2 ஆட்டங்களில் வெற்றியை பதிவு செய்யும் பட்சத்தில் பிளே – ஆப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்புள்ளது. பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பந்து வீச்சில் கோட்டை விட்டு தோல்வியை தழுவியுள்ள சென்னை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
A look at the Points Table after Match 47 of the #VIVOIPL 👇 #RRvCSK pic.twitter.com/WNdMgWRgX1
— IndianPremierLeague (@IPL) October 2, 2021
Indian Premier League, 2021Sheikh Zayed Stadium, Abu Dhabi 05 February 2023
Rajasthan Royals 190/3 (17.3)
Chennai Super Kings 189/4 (20.0)
Match Ended ( Day – Match 47 ) Rajasthan Royals beat Chennai Super Kings by 7 wickets
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 190 ரன்கள் கொண்ட இமாலய இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Sensational run-chase to seal a win! 👌 👌@rajasthanroyals put up a solid show with the bat & beat #csk by 7⃣ wickets. 👏👏 #vivoipl #rrvcskScorecard 👉 https://t.co/dRp6k449yy pic.twitter.com/fbv8zN02Aw
— IndianPremierLeague (@IPL) October 2, 2021
31 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளை அடித்து வானவேடிக்கை காட்டி வரும் சிவம் துபே அரைசதம் கடந்தார்.
190 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் ராஜஸ்தான் அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் சேர்த்துள்ளது.
சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் 3 சிக்ஸர் 6 பவுண்டரிகளை விளாசி 19 பந்துகளில் அரைசதம் கடந்த யஷாஸ்வி ஜெய்ஸ்வால் 60 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
A much-needed breakthrough for @ChennaiIPL! 👍 👍The Evin Lewis-Yashasvi Jaiswal stand comes to an end as @imShard strikes. 👌 👌 #vivoipl #rrvcskFollow the match 👉 https://t.co/jo6AKQBhuK pic.twitter.com/G9XgWgsFAx
— IndianPremierLeague (@IPL) October 2, 2021
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 190 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் ராஜஸ்தான் அணி பவர் பிளே முடிவில் 1 விக்கெட்டை இழந்து 81 ரன்கள் சேர்த்துள்ளது.
190 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் ராஜஸ்தான் அணியில் அதிரடியாக ரன் சேர்த்த எவின் லூயிஸ் – யஷாஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடியில் எவின் லூயிஸ் 12 பந்துகளில் 2 சிக்ஸர் 2 பவுண்டரிகளை பறக்க விட்டு 27 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
190 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் ராஜஸ்தான் அணியில் எவின் லூயிஸ், யஷாஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடியில் அதிரடி காட்டிய வரும் யஷாஸ்வி ஜெய்ஸ்வால் 19 பந்துகளில் அரைசதம் கடந்து மிரட்டியுள்ளார்.
WHAT. A. START! 👌 👌Jaw-dropping stuff from Jaiswal! 👍 👍#vivoipl #rrvcskA 19-ball FIFTY for the young @rajasthanroyals opener! 👏 👏Follow the match 👉 https://t.co/jo6AKQBhuK pic.twitter.com/vgvLbtg6Xh
— IndianPremierLeague (@IPL) October 2, 2021
43 பந்துகளில் தனது அரைசத்தை கடந்த சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் 60 பந்துகளில் சதம் அடித்து மிரட்டினார். அதிலும் குறிப்பாக ஆட்டத்தின் இறுதி பந்தில் சிக்ஸர் அடித்து 100 ரன்களை கடந்தார். மேலும், 60 பந்துகளில் 101 சேர்த்து சென்னை அணி வலுவான ஸ்கோரை எட்ட மிகப்பெரிய அளவில் உதவியுள்ளார். அவர் 60 பந்துகளில் 5 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 101 ரன் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
🎥 That moment when @Ruutu1331 completed his maiden #vivoipl 💯! 💛 💛TAKE. A. BOW! 🙌#vivoipl | #rrvcsk | @ChennaiIPL Scorecard 👉 https://t.co/jo6AKQBhuK pic.twitter.com/nRS830RvK8
— IndianPremierLeague (@IPL) October 2, 2021
💯 for @Ruutu1331 ! 👏 💛O. U. T. S. T. A. N. D. I. N. G! 🙌 🙌The @ChennaiIPL right-hander brings up his maiden #vivoipl hundred with a MAXIMUM! 👌 👌 #vivoipl #rrvcskFollow the match 👉 https://t.co/jo6AKQBhuK pic.twitter.com/kDayzAQd7Y
— IndianPremierLeague (@IPL) October 2, 2021
ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சை சிதறடித்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் குவித்துள்ளது. எனவே ராஜஸ்தான் அணிக்கு 190 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
INNINGS BREAK! A sensational hundred for @Ruutu1331 🙌A 3⃣2⃣*-run blitz from @imjadeja 👌Cameos from @faf1307 & Moeen Ali 👍3/39 for @rahultewatia02 The #rr chase will commence soon. #vivoipl #rrvcsk @ChennaiIPL Scorecard 👉 https://t.co/jo6AKQBhuK pic.twitter.com/MGtYCcJkGZ
— IndianPremierLeague (@IPL) October 2, 2021
சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து இருந்தாலும் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டின் அதிரடியால் அந்த அணி வலுவான நிலையில் உள்ளது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீசி வரும் நிலையில், பேட்டிங் செய்து வரும் சென்னை அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 63 ரன்களை சேர்த்துள்ளது.
200 வது ஆட்டத்தில் களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 3 ரன்னுடன் நடையை கட்டினார்.
Second wicket for @rahultewatia02 👍 Second success for @rajasthanroyals 👍Suresh Raina holed out in the deep. #vivoipl #rrvcskFollow the match 👉 https://t.co/jo6AKQBhuK pic.twitter.com/XDqRJafHtC
— IndianPremierLeague (@IPL) October 2, 2021
சென்னை அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்த தொடக்க வீரர் ஃபாஃப் டு பிளெசிஸ் 25 ரன்கள் (19 பந்துகள், 2 பவுண்டரி, 1 சிக்ஸர்) சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
Tewatia strikess!! 🕺Faf walks, Sanju stumps, we celebrate. LET'S GO!! #rrvcsk | #hallabol | #royalsfamily
— Rajasthan Royals (@rajasthanroyals) October 2, 2021
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ள நிலையில் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் – ஃபாஃப் டு பிளெசிஸ் ஜோடி களமிறங்கியுள்ளனர்.
அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்துள்ள இந்த ஜோடி பவர் பிளே முடிவில் 44 ரன்களை சேர்த்துள்ளது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ள நிலையில் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் – ஃபாஃப் டு பிளெசிஸ் ஜோடி களமிறங்கியுள்ளனர்
சென்னை அணிக்கெதிரான ஆட்டத்தில் களமிறங்கும் ராஜஸ்தான் அணியில் 5 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சிவம் துபே, டேவிட் மில்லர், க்ளென் பிலிப்ஸ், ஆகாஷ் சிங், மார்க்கண்டே ஆகிய வீரர்கள் களமிறங்க உள்ளார்கள்.
அதேவேளையில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக களம் காணும் சென்னை அணியில் தீபக் சாஹர் மற்றும் டிஜே பிராவோவுக்கு பதிலாக சாம் கர்ரன் மற்றும் கேஎம் ஆசிஃப் விளையாடுகிறார்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் (விளையாடும் லெவன்): ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ், மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, எம்எஸ் தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன், ஷர்துல் தாக்கூர், கேஎம் ஆசிஃப், ஜோஷ் ஹேசில்வுட்
ராஜஸ்தான் ராயல்ஸ் (விளையாடும் XI): எவின் லூயிஸ், யஷாஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), சிவம் துபே, க்ளென் பிலிப்ஸ், டேவிட் மில்லர், ராகுல் தேவாடியா, ஆகாஷ் சிங், மயங்க் மார்கண்டே, சேத்தன் சகரியா, முஸ்தாபிசூர் ரஹ்மான்
A look at the Playing XIs 🔽#vivoipl #rrvcskFollow the match 👉 https://t.co/jo6AKQBhuK pic.twitter.com/nQHBxs1iPJ
— IndianPremierLeague (@IPL) October 2, 2021
இன்று இரவு 7:30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
தோனி தனது 200 வது ஐபிஎல் போட்டியில் கேப்டனாக பங்கேற்கிறார்
550 டி 20 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் ஆவதற்கு டுவைன் பிராவோவுக்கு இரண்டு விக்கெட்டுகள் தேவை.
150 ஐபிஎல் சிக்ஸர்களை பூர்த்தி செய்ய அம்பதி ராயுடுவுக்கு மூன்று சிக்ஸர்கள் தேவை.
ஐபிஎல்லின் இரண்டாவது முன்னணி விக்கெட் வீழ்த்தும் வீரராக அமித் மிஸ்ராவை முந்திச் செல்ல பிராவோவுக்கு 2 விக்கெட்டுகள் தேவை
ராஜஸ்தான் ராயல்ஸ்: எவின் லூயிஸ், யஷாஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டன், மஹிபால் லோமோர், ராகுல் தேவாடியா, ரியான் பராக்/அனுஜ் ராவத், கிறிஸ் மோரிஸ்/ஜெரால்ட் கோய்ட்ஸி, முஸ்தாபிஜூர் ரஹ்மான், கார்த்திக் தாகியா, சேத்தன் சகரியா
சென்னை சூப்பர் கிங்ஸ்: ஃபாஃப் டு பிளெசிஸ், ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி,சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, எம் எஸ் தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்) ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட்
இன்று இரவு 7:30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
Hello & welcome from Abu Dhabi for Match 4⃣7⃣ of the #vivoipl. 👋@IamSanjuSamson's @rajasthanroyals take on the @msdhoni-led @ChennaiIPL. 👏 👏 #rrvcsk Which team will come out on top tonight? 🤔 🤔 pic.twitter.com/yjC1fNKKM9
— IndianPremierLeague (@IPL) October 2, 2021