RR vs CSK Highlights: சென்னையை வீழ்த்தி வெற்றிக் கணக்கை தொடங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி!

RR vs CSK score updates IPL 2025: 18வது ஐ.பி.எல் தொடரில் 11வது லீக் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையேயான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

RR vs CSK score updates IPL 2025: 18வது ஐ.பி.எல் தொடரில் 11வது லீக் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையேயான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rr vs csk odisha

RR vs CSK score updates IPL 2025: 18வது ஐ.பி.எல் தொடரின் 11-வது லீக் ஆட்டம் குவஹாத்தியில் உள்ள பர்சபரா விளையாட்டு மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையேயான போட்டி.ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. 

Advertisment

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணி இந்த தொடரில் 2 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் வெற்றி பெற்றும் 1 போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளன. அதே போல, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளன. அதனால், ராஜஸ்தான் அணி வெற்றிக் கணக்கைத் தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிதிஷ் ரானாவின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் அந்த 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது.

இதன்மூலம் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால்,   ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

Advertisment
Advertisements

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள்: 

சஞ்சு சாம்சன் (கேப்டன்), நிதிஷ் ரானா, ஷிம்ரோன் ஹெட்மையர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், வைபவ் சூர்யவன்ஷி, வனிண்டு ஹசரங்கா, யுத்விர் சிங், துருவ் ஜுரெல், குணால் சிங் ரத்தோர், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆகாஷ் ஷர்மா, ஃபசல்லாக் ஃபரூக்கி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள்:

ஆண்ட்ரே சித்தார்த், டெவோன் கான்வே,  ராகுல் திரிபாதி, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஷைக் ரஷீத், தீபக் ஹூடா,  ரச்சின் ரவீந்திரா, ரவிச்சந்திரன் அஸ்வின், சாம் கரன், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, ராமகிருஷ்ணா கோஷ், ஜமி ஓவர்டான்

  • Mar 30, 2025 23:32 IST

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிக் கணக்கை தொடங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ்!

    20 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், 6 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. 



  • Mar 30, 2025 23:25 IST

    183 ரன்கள் இலக்கு; தோனி அவுட்... வெற்றி பெறுமா சென்னை?

    19.1 ஓவரில் தோனி, சந்தீப் சர்மா பந்தில் ஹெட்மையரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து ஓவர்டான் வந்துள்ளார்.



  • Mar 30, 2025 23:18 IST

    ஜடேஜா - தோனி வெற்றிக்கு அழைத்துச் செல்வார்களா?

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  18.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புகு 150 ரன்கள் எடுத்துள்ளது.  ஜடேஜா - தோனி வெற்றிக்கு அழைத்துச் செல்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



  • Mar 30, 2025 23:16 IST

    விஜய சங்கர் அவுட்

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்திருந்தபோது, 9 ரன்கள் எடுத்திருந்த விஜய சங்கர் ஹசரங்கா பந்தில்  போல்ட் அவுட் ஆனார். அடுத்து ஜடேஜா வந்தார். இதனிடையே நிதானமாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் அடித்தார். 



  • Mar 30, 2025 23:13 IST

    சிவம் துபெ அவுட்

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்திருந்தபோது, 18 ரன்கள் எடுத்திருந்த சிவம் துபே ஹசரங்கா பந்தில்  ரியான் பராக் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து விஜய சங்கர் வந்தார்.



  • Mar 30, 2025 23:12 IST

    ராகுல் திரிபாதி அவுட்

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7.1 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் எடுத்திருந்தபோது, 23 ரன்கள் எடுத்திருந்த ராகுல் திரிபாதி ஹசரங்கா பந்தில்  ஹெட்மையரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து ஷிவம் துபே வந்தார். 

     



  • Mar 30, 2025 21:47 IST

    ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பந்தில் அடி

    தேஷ் பாண்டே வீசிய பந்தில் ருதுராஜ் கெய்க்வாட் கையில் எல்போ பகுதியில் அடி வாங்கினார். ஆனால், சாமாளித்துக்கொண்டு ருதுராஜ் தொடர்ந்து விளையாடினார். 



  • Mar 30, 2025 21:44 IST

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆரம்பமே அதிர்ச்சி... ரச்சின் ரவீந்திராவை வெளியேற்றினார் ஜோஃப்ரா ஆர்ச்சர்

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரில் ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்தில் ரச்சின் ரவீந்திரா ரன் எதுவும் எடுக்காமல் ஜுரெல் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, ருதுராஜ் கெய்க்வாட் வந்தார்.



  • Mar 30, 2025 21:41 IST

    183 ரன்கள் நிர்ணயித்த ராஜஸ்தான் ராயல்ஸ்; விரட்டுமா சென்னை?

    20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியுள்ளது.



  • Mar 30, 2025 21:39 IST

    குமார் கார்த்திகேயா ரன் அவுட் 

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்திருந்தபோது, குமார் கார்த்திகேயா 1 ரன்னில் ரன் அவு ஆனார். அடுத்து மஹீஷ் திக்ஷணா வந்தார்.



  • Mar 30, 2025 21:36 IST

    ஜோஃப்ரா ஆர்ச்சர் டக் அவுட் 

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்திருந்தபோது, வந்த வேகத்திலேயே ஜோஃப்ரா ஆர்ச்சர், கலீல் அஹமது பந்தில் ருதுராஜ் கெய்க்வாட் இடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து குமார் கார்த்திகேயா வந்தார்.



  • Mar 30, 2025 21:33 IST

    ரியான் பராக் போல்ட் அவுட்

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்திருந்தபோது, 36 ரன்கள் எடுத்திருந்த ரியான் பராக் பதினா பந்தில் அவுட் ஆனார். அடுத்து ஜோஃப்ரா ஆர்ச்சர் வந்தார்.



  • Mar 30, 2025 21:33 IST

    ஹசரங்கா அவுட்

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்திருந்தபோது, 4 ரன்கள் எடுத்திருந்த ஹசரங்கா ஜடேஜா பந்தில் விஜய சங்கரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து ஹெட்மையர் வந்தார்.



  • Mar 30, 2025 21:33 IST

    ஜுரெல் அவுட்

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்திருந்தபோது, 3 ரன்கள் எடுத்திருந்த ஜுரெல் நூர் அஹமது பண்தில் பதிரானாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து, ஹசரங்கா வந்தார். 



  • Mar 30, 2025 20:30 IST

    அதிரடியாக ரன் குவித்த நிதிஷ் ரானா... ஸ்டம்பிங்ஸ் செய்து வெளியேற்றிய தோனி!

    அதிரடியாக விளையாடிய நிதிஷ் ரானா 36 பந்துகளில் 81 ரன்கள் அடித்த நிலையில், அஸ்வின் பந்தில் தோனி ஸ்டம்பிங் செய்து வெளியேற்றினார்.



  • Mar 30, 2025 20:23 IST

    சஞ்சு சாம்சன் அவுட் 

    16 பந்துகளில் 20 ரன்கள் அடித்த சஞ்சு சாம்சன் நூர் அஹமது பந்தில் ரச்சின் ரவீந்திராவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து ரியான் பராக் வந்து நிதிஷ் ரானாவுடன் ஜோடி சேர்ந்தார்.



  • Mar 30, 2025 19:35 IST

    சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்து வீச்சு... ராஜஸ்தானுக்கு ஆரம்பமே அதிர்ச்சி!

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கலீல் அஹமது முதல் ஓவரை வீசினார். ஜெய்ஸ்வால் 4 ரன் அடித்த நிலையில் அஸ்வின்னிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.



  • Mar 30, 2025 19:31 IST

    டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சு தேர்வு.... ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்

    டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சு தேர்வு செய்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் ஓபனிங் பேட்டர்கள் சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால் களமிறங்கினர். 



Csk Vs Rr

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: