IPL 2024, Rajasthan Royals vs Delhi Capitals Score: ஐ.பி.எல் - டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது.
17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த 22 ஆம் முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (வியாழக்கிழமை) இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் தொடங்கும் 9வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: RR vs DC Live Score, IPL 2024
இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில், ஜெய்ஸ்வால், 5 ரன்களுக்கும், பட்லர் 11 ரன்களுக்கும் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த கேப்டன் சாம்சன், 14 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 15 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் ராஜஸ்தான் அணி 36 ரன்களுக்கு முதல் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரியான் பராக் – அஸ்வின் ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்தது. ஒருமுறையில் பராக் நிதாமாக விளையாட மறுமனையில் அதிரடியில் இறங்கிய அஸ்வின், சிக்சர்களாக பறக்கவிட்டார். இதனால் ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் அதிரித்த நிலையில், அணியின் ஸ்கோர் 90 ரன்களை எட்டியபோது அஸ்வின் ஆட்டமிழந்தார். 19 பந்துகளை சந்தித்த அவர் 3 சிக்சருடன் 29 ரன்கள் குவித்தார்.
அடுத்து களமிறங்கிய துருவ் ஜோரல், 12 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹெட்மயர் பராக்குடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்ட நிலையில், அதிரடியாக விளையாடிய பராக் அரைசதம் கடந்து அசத்தினார். 19 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்திருந்தது.
ஆன்ட்ரிச் நோர்க்கிய வீசிய 20-வது ஓவரை எதிர்கொண்ட ரியான் பராக், முதல் இரு பந்துகளில் பவுண்டரியும், 3-வது பந்தில் சிக்சர், 4-வது பந்தில் பவுண்டரி 5-வது பந்தில் சிக்சர், கடைசி பந்தில் சிக்கிள் என மொத்தம் 25 ரன்களை எடுத்தார். இதன் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. பராக் 45 பந்துகளில் 7 பவுண்டரி 6 சிக்சருடன் 84 ரன்கள் குவித்தார். ஹெட்மயர் 7 பந்துகளில் ஒரு பவுண்டரி 1 சிக்சருடன் 14 ரன்கள் எடுத்தார்.
டெல்லி அணி தரப்பில், கலீல் அகமது, முகேஷ் குமார், நோக்கியா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து 186 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில், அதிரடி தொடக்கம் கொடுத்த மீச்செல் மார்ஷ் 12 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 12 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிக்கி புய் ரன் கணக்கை தொடங்காமலே வெளியயேறிய நிலையில், ரிஷப் பண்ட் விக்கெட் சரியை தடுத்து நிறுத்தினார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய வார்னர் அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதனால் டெல்லி அணி முன்னெற்றம் கண்ட நிலையில், அரைசதத்தை நெருங்கிய வார்னர் 34 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ரிஷப் பண்ட் 26 பந்துகளில் 28 ரன்களும், அபிஷேக் போரல் 9 ரன்களுக்கும் வெளியேறிய நிலையில், 122 ரன்களுக்கு டெல்லி அணி 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இதனையடுத்து 6-வது விக்கெட்டுக்கு இணைந்த அக்சர் பட்டேல் – ஸ்டப்ஸ் ஜோடி விக்கெட் சரிவை தடுத்து நிறுத்தி அணியை வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தது. 16 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கடைசி 4 ஓவர்களில் வெற்றிக்கு 60 ரன்கள் தேவை என்ற நிலையில், டெல்லி அணி விளையாடி வருகிறது.