RR vs GT, IPL 2023 Score in Tamil: 10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இன்று இரவு 7:30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடக்கும் 48வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ்
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்(கே), தேவ்தத் பாடிக்கல், ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், ஆடம் ஜம்பா, சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்
குஜராத் டைட்டன்ஸ்
விருத்திமான் சாஹா(வி), ஹர்திக் பாண்டியா(கே), விஜய் சங்கர், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் தெவாட்டியா, ரஷித் கான், மோகித் சர்மா, நூர் அகமது, முகமது ஷமி, ஜோசுவா லிட்டில்
இந்த ஐ.பி.எல் தொடரின் 49-வது லீக் போட்டியில், சிறப்பாக விளையாடிய குஜராத் அணி ராஜஸ்தான் அணியை எளிதாக வீழ்த்தி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார பெற்றது.
இந்த போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் , ஜோஸ் பட்லர் களமிறங்கினர். தொடக்கத்தில் பட்லர் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.பின்னர் ஜெய்ஸ்வால் 14 ரன்களுக்கு வெளியேறினார்.
பின்னர், சிறப்பாக விளையாடிய சாம்சன் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். குஜராத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடர்ந்து களமிறங்கிய அஸ்வின் 2ரன்கள் , பராக் 4ரன்கள் , படிக்கல் 12ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த ஹெட்மையர் 7 ரன்கள் , ஜூரல் 9 ரன்களும் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். இறுதியில் 17.5 ஓவர்களுக்கு விக்கெட் இழந்து 119 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான். குஜராத் சார்பில் ரஷித் கான் 3 விக்கெட்டும் , நூர் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து 119 ரன்கள் இலக்குடன் குஜராத் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில்லும், விருத்திமான் சகாவும் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர்.
சுப்மன் கில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த, கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக விளையாடினார். ஹர்திக் பாண்ட்யா 15 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 39 ரன்கள் விளாசினார். பொறுப்புடன் விளையாடிய சகா 41 ரன்கள் எடுத்தார். சிறப்பாக விளையாடிய குஜராத் அணி 17.5 ஓவர்களில் இலக்கை கடந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் இருந்து கடைசி வரை குஜராத் அணியே ஆதிக்கம் செலுத்தி வந்தது. மிக எளிதாக ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் அணி அபார வெற்றி பெற்றது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil