Advertisment

RR vs GT LIVE Score, IPL 2024: ஆட்டத்தை வென்ற குஜராத் அணி

ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி த்ரில் வெற்றிபெற்றது.

author-image
WebDesk
New Update
RR vs GT LIVE Score IPL 2024 Match 24 Rajasthan Royals vs Gujarat Titans scorecard updates Jaipur Tamil News

ஐ.பி.எல். 2024: ராஜஸ்தான் ராயல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Rajasthan Royals vs Gujarat Titans IPL 2024 Live Score: ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி த்ரில் வெற்றிபெற்றது. 

Advertisment

17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (புதன்கிழமை) இரவு 7:30 மணிக்கு ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெறும் 24-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது.

ஆங்கிலத்தில் படிக்கவும்: RR vs GT LIVE Score IPL 2024

டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால், பட்லர் இருவரும் ஓரளவு சிறப்பான தொடக்கம் கொடுத்தது. இதில் பட்லர் 8 ரன்களில் ஆட்டமிழந்தாலும், ஜெய்ஸ்வால் 19 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் ராஜஸ்தான் அணி 42 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

இதனைத் தொடர்ந்து 3-வது விக்கெட்டுக்கு இணைந்த கேப்டன் சஞ்சு சாம்சன், ரியான் பராக் ஜோடி அடுத்து விக்கெட் விழாவில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியது. இந்த ஜோடியை பிரிக்க குஜராத் அணி மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. அதிரடியாக ஆடிய ரியான் பராக் அரைசதம் கடந்த நிலையில், அடுத்து சஞ்சு சாம்சனும் அரைசதம் கடந்து அசத்தினார்.

3-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 12 ஓவர்களில் 130 ரன்கள் சேர்த்த நிலையில், அணியின் ஸ்கோர் 18.4 ஓவர்களில் 172 ரன்களை கடந்தபோது ரியான் பராக் ஆட்டமிழந்தார். 48 பந்துகளை சந்தித்த அவர் 3 பவுண்டரி 5 சிக்சருடன் 76 ரன்கள் குவித்தார். அடுத்து களமிறங்கிய ஷெட்மயர் 5 பந்துகளில் ஒரு பவுண்டரி ஒரு சிக்சருடன் 13 ரன்கள் எடுக்க நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது.

கேப்டன் சஞ்சு சாம்சன் 38 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 68 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். குஜராத் அணி தரப்பில், ரஷித், உமேஷ், மொஹித் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து 197 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணிக்கு சாய் சுதர்சன் – சுப்மான் கில் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இவர்களின் ஆட்டத்தால் குஜராத் அணியின் ஸ்கோர் உயர்ந்த நிலையில், 64 ரன்களை எட்டியபோது, சாய் சுதர்சன் ஆட்டமிழந்தார். 29 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 35 ரன்கள் குவித்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய வேட் 4 ரன்களுக்கும், அபினவ் மனோகர் 1 ரன்னுக்கும் அடுத்தடுத்து வெளியேறினர்.

இவர்கள் மூவரின் விக்கெட்டையும் குல்தீப் சென் வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய விஜய் சங்கர் கேப்டன் சுப்மான் கில்லுடன் இணைந்து சிறப்பாக விளையாடிய நிலையில், சாஹல் வீசிய 14-வது ஓவரின் இறுதிபந்தில் போல்ட் ஆகி வெளியேறினார். 10 பந்துகளை சந்தித்த விஜய் சங்கர் 3 பவுண்டரியுடன் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 14 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்துள்ளது.

வெற்றிக்கு 36 பந்துகளில் 86 ரன்கள் தேவை என்ற நிலையில், சுப்மான் கில், ராகுல் திவாட்டிய களத்தில் உள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Gujarat Titans Rajasthan Royals IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment