Advertisment

RR vs KKR Score IPL 2024: மழையால் ஆட்டம் ரத்து; ஏமாற்றம் அடைந்த ராஜஸ்தான் ராயல்ஸ்!

Rajasthan Royals vs Kolkata Knight Riders IPL 2024 Score: ஐ.பி.எல் கடைசி லீக் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இதனால், ராஜஸ்தான் அணி ஏமாற்றத்துடன் 3வது இடத்தைப் பிடித்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rr vs kkr

ஐ.பி.எல் கடைசி லீக் போட்டி; ராஜஸ்தான் - கொல்கத்தா மழையால் ரத்து

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Rajasthan Royals vs Kolkata Knight Riders IPL 2024 Live Score: சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) கடைசி லீக் ஆட்டத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியும் ஞாயிற்றுக்கிழமை விளையாட இருந்த போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.  

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: RR vs KKR Live Score, IPL 2024: Rajasthan face Kolkata in Guwahati

இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) 2024 கடைசி லீக் போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற இருந்தது. ஆனால், மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதமானது. மழை விட்ட பிறகு, போட்டி 7 ஓவர் போட்டியாக குறைக்கப்பட்டு டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. போட்டி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால், போட்டி ரத்து செய்யப்பட்டது. இதன் மூலம், இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கபட்டது. புள்ளிப்பட்டியலின் அடிப்படையில், ராஜஸ்தான் ராயல்ஸ் ஏமாற்றத்துடன் 3வது இடத்தைப் பிடித்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஐதராபாத் அணியும் முதல் தகுதிச் சுற்றில் மோதல் உள்ளன.

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழை வந்து போட்டியைக் கெடுத்துவிட்டது. இதனால், ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். ரசிகர்களுக்கு மட்டுமல்ல, ராஜஸ்தான் அணிக்கும் இந்த போட்டி ரத்து செய்ய்ப்பட்டிருப்பது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Rajasthan Royals Kkr IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment