Advertisment

RR vs LSG Highlights : கே.எல்.ராகுல் - பூரண் போராட்டம் வீண் : முதல் வெற்றியை பதிவு செய்தது ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3:30 மணிக்கு தொடங்கும் 4வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோத உள்ளன.

author-image
WebDesk
New Update
LSG vs RR IPL 2024

ஐ.பி.எல். 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

RR vs LSG | Rajasthan Royals vs Lucknow Super Giants IPL 2024 Live Score: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா நேற்று முதல் தொடங்கியுள்ளது. மே 26 வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.

Advertisment

RR vs LSG LIVE Score, IPL 2024

இந்நிலையில், இந்த தொடரில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3:30 மணிக்கு தொடங்கும் 4வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதியது. 

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரராக களமிறங்கிய ஜோஸ் பட்லர் 11 ரன்களுக்கும், ஜெயஸ்வால் 12 பந்துகளில் 3 பவுண்டரி ஒரு சிக்சருடன் 24 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் – ரியான் பராக் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் மளமளவென அதிகரித்தது.

இதனிடையே அதிரடியாக விளையாடிய சம்சன் அரைசதம் கடந்த நிலையில், அரைசதத்தை நெருங்கிய பராக் 29 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்சருடன் 43 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஹெட்மயர் 5 ரன்களில் வெளியேறினாலும், துருவ் ஜோரல் சிறப்பாக விளையாடி சாம்சனுக்கு கை கொடுத்தார். நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்துள்ளது.

அரைசதம் கடந்த சாம்சன், 52 பந்துகளில் 3 பவுண்டரி 6 சிக்சருடன் 82 ரன்களும், ஜோரல் 12 பந்துகளில் ஒரு சிக்சர் ஒரு பவுண்டரியுடன் 20 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். லக்னோ அணியில் நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளும், பிஷ்னோய், மொசின் சான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினது.

தொடர்ந்து 194 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியில், தொடக்க வீரரான குயிண்டன் டீகாக், 4 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த படிக்கல் ரன் கணக்கை தொடக்காமலும், ஆயுஷ் பதோனி ஒரு ரன்னும் எடுத்து வீழ்ந்தனர். இதனால் லக்னோ அணி 11 ரன்களுக்கு முதல் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், 4-வது விக்கெட்டுக்கு இணைந்த கேப்டன் ராகுல், தீபக் ஷூடா ஜோடி சிறப்பாப விளையாடியது.

இந்த ஜோடியின் ஆட்டத்தினால், லக்னோ அணியின் ஸ்கோர் மெல்ல உயர்ந்த நிலையில், 60 ரன்களை எட்டியபோது, ஷூடா 26 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய நிகோலஷ் பூரண் – ராகுலுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் லக்னோ அணி வெற்றியை நோக்கி பயணித்த நிலையில், சிறப்பாக விளையாடிய ராகுல் அரைசதம் கடந்தார்.

அணியின் ஸ்கோர் 16 ஓவர்களில் 145 ரன்களை கடந்தபோது அரைசதம் கடந்த ராகுல் ஆட்டமிழந்தார். 44 பந்துகளை சந்தித்த ராகுல் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்டொயினிஸ் 3 ரன்களில் வீழ்ந்தார். இதனிடையே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பூரண் அரைசதம் கடந்து அசத்திய நிலையில், கடைசி ஓவரில் வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்டது.

ஆவேஷ்கான் வீசிய இந்த ஓவரில் லக்னோ அணி 6 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ராஜஸ்தான் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிவரை களத்தில் இருந்த பூரண் 41 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்சருடன் 64 ரன்கள் எடுத்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

RR vs LSG IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment