IPL 2024 | Rajasthan Royals | Mumbai Indians: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் திங்கள்கிழமைஜெய்பூரில் நடைபெற்ற 38-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது..
ஐ.பி.எல் 2024 தொடரில் 38-வது லீக் ஆட்டம், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே சவாய் மான்சிங் இந்தூர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், ரோஹித் சர்மா, இஷான் கிஷண் களமிறங்கினர்.
ஆரம்பமே அதிர்ச்சியாக, ட்ரெண்ட் போல்ட் வீசிய முதல் ஓவரின் 0.5-வது பந்தில், 6 ரன்கள் மட்டுமே எடுத்திருண்த ரோஹித் சர்மா, சஞ்சு சாம்சன் இடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து, சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்ய வந்தார்.
போட்டியின் 2-வது ஓவரை வீசிய சந்தீப் சர்மாவின் 3வது ப்ந்தில், இஷான் கிஷண் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து, திலக் வர்மா பேட்டிங் செய்ய வந்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணி 3.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 20 ரன்கள் எடுத்திருந்தபோது, 8 பந்துகளில் 10 ரன்கள் அடித்திருந்த சூர்யகுமார் யாதவ், சந்தீப் சர்மா பந்தில் ரோவ்மேன் பவல்லிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, பேட்டிங் செய்ய வந்த முஹமது நபி அதிரடியாக விளையாடினார்.
மும்பை இந்தியன்ஸ் அணி 7.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்திருந்தபோது, 17 பந்துகளில் 23 ரன்கள் அடித்திருந்த முஹமது நபி, யுஸ்வேந்திர சாஹல் பந்தில் அவரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து நேஹல் வதே பேட்டிங் செய்ய வந்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், திலக் வர்மா மற்றும் நேஹல் வதேரா நிதானமாக விளையாடி வருகின்றனர். ஒரு கட்டத்தில் அதிரடியாக விளையாடிய திலக் வர்மா அரைசதம் அடித்தார்.
இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்கரர்கள் ஜெய்ஸ்வால், ஜோஸ் படலர் பேட்டிங் செய்ய களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக அடித்து விளையாடினார்கள்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7.6 ஓவர்களில் 74 ரன்கள் எடுத்திருந்தபோது, அதிரடியாக விளையாடிய ஜோஸ் பட்லர் 25 பந்துகளில் 35 ரன்கள் அடித்திருந்த நிலையில், பியூஷ் சாவ்லா பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து, கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்ய வந்து ஜெய்ஸ்வால் உடன் ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடி சிறப்பாக விளையாடி ராஜஸ்தான் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்தார். தொடர்ந்து, சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் சம் அடித்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதியில் 18.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: RR vs MI Live Score, IPL 2024
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் நடப்பு சீசனில் இதுவரை ஆடிய 7 போட்டிகளில் 6 வெற்றி, ஒரு தோல்வி என 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் வலுவான நிலையில் உள்ளது. மறுபுறம், ஹார்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் 7 போட்டியில் 3ல் மட்டும் வென்று 7-வது இடத்தில் உள்ளது.
சொந்த மண்ணில் களமாடும் ராஜஸ்தான் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் ஆதிக்கம் செலுத்தவே நினைக்கும். அதற்கு முட்டுக் கட்டை போட்டு பட்டியலில் முன்னனிலை பெற மும்பை போராடும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சதேகமில்லை.
நேருக்கு நேர்
ஐ.பி.எல் தொடரில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இதுவரை 29 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், மும்பை 15ல் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் 13 முறை வெற்றி பெற்றுள்ளது. 1 போட்டி முடிவு இல்லாமல் முடிந்தது.
மோசமான வரலாற்றை மாற்றுமா மும்பை?
மும்பை அணி 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு ஜெய்ப்பூர் மைதானத்தில் ஆடிய அனைத்து போட்டிகளிலும் ராஜஸ்தானே வெற்றி பெற்றுள்ளது. 12 வருடங்களாக தொடரும் இந்த மோசமான வரலாற்றை மும்பை அணி மாற்றுமா? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.