Advertisment

RR vs PBKS Highlights: சாம் கரன் அதிரடி அரைசதம் : ராஜஸ்தான் அணிக்கு 4-வது தொடர் தோல்வி

ஐ.பி.எல். 2024 தொடரில் இன்று (புதன்கிழமை) இரவு 7:30 மணிக்கு கவுகாத்தியில் உள்ள அசாம் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறும் 65-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

author-image
WebDesk
New Update
RR vs PBKS Live Score IPL 2024 Match 65 today Rajasthan Royals vs Punjab Kings scorecard updates in tamil

ஐ.பி.எல். 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

 IPL 2024 | Punjab Kings | Rajasthan Royals: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (புதன்கிழமை) இரவு 7:30 மணிக்கு கவுகாத்தியில் உள்ள அசாம் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறும் 65-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: RR vs PBKS Live Score, IPL 2024

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கிய நிலையில், பட்லர் இல்லாததால், ஜெய்ஸ்வாலுடன் இணைந்து டாம் கோஹ்லர் தொடக்க வீரராக களமிறங்கினார். இதில் 4 ரன்கள் எடுத்திருந்த ஜெய்ஸ்வால் முதல் ஓவரின் 4-வது பந்தில் போல்டாகி வெளியேறினார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன், 15 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

தொடக்க ஆட்டக்காரர் டாம் கோஹ்லர் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 23 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்து வீழ்ந்தார். அடுத்து களமிறங்கிய ரியான் பராக் ஒரு பக்கம் போராட மறுமுனையில், அஸ்வின் அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்த நிலையில், 19 பந்துகளை சந்தித்த அஸ்வின், 3 பவுண்டரி ஒரு சிக்சருடன் 28 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய ஜூரேல் 0, பவல் 4, பெராரியா 7 ஆகியோர் அடுத்தடுத்து வீழ்ந்த நிலையில், மறுமுனையில் அரைசதத்தை நெருங்கிய பராக் 34 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 48 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதிக்கட்டத்தில் போல்ட் 12 ரன்கள் எடுத்தார். நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. ஆவேஷ்கான் 3 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

பஞ்சாப் அணி தரப்பில், சாம் கரன், ஹர்ஷல் பட்டேல், ராகுல் சஹார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப், எல்லிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 145 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் 6 ரன்களிலும், ஜானி பேர்ஸ்டோ 22 பந்துகளில் 14 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரோசவ் 13 பந்துகளில் 5 பவுண்டரியுடன 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், ஷஷாங் சிங் ரன் கணக்கை தொடங்காமலே வெளியேறினார். இதனால் பஞ்சாப் அணி 48 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

5-வது விக்கெட்டுக்கு இணைந்து கேப்டன் சாம்கரன் – ஜித்தேஷ் சர்மா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டது. குறிப்பாக சாம் கரன் கேப்டனுக்கே உரிய பாணியில் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்த நிலையில், ஜித்தேஷ் சர்மா 20 பந்துகளில் 2 சிக்சருடன் 22 ரன்கள் குவித்து அவுட்டானார்.

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த கேப்டன் சாம் கரன் அணிக்கு வெற்றியையும் தேடி கொடுத்தார். 18.5 ஓவர்களில் பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி வரை களத்தில் இருந்த சாம் கரன் 41 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 63 ரன்கள் குவித்தார். அஷூதேஷ் சர்மா 11 பந்துகளில் ஒரு பவுண்டரி ஒர சிக்சருடன் 17 ரன்கள் எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில், ஏற்கனவே ப்ளேஅப் வாய்ப்பை பெற்றுவிட்ட ராஜஸ்தான் அணி தொடர்ச்சியாக 4-வது தோல்வியை சந்தித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Rajasthan Royals Punjab Kings IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment