IPL 2024 | Rajasthan Royals | Royal Challengers Bangalore: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்ட இந்தத் தொடரில், அகமதாபாத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடந்த முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் (குவாலிஃபையர் 1) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: RR vs RCB Live Score, IPL 2024 Eliminator
இந்நிலையில், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில், புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ், 4-வது இடத்தில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சு தேர்வு செய்தார். இதையடுத்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி கேப்டன் பாஃப் டு பிளெஸிஸ் களமிறங்கினர்.
பாஃப் டு பிளெஸிஸ் 14 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ட்ரெண்ட் போல்ட் பந்தில் ரோவ்மன் பவல் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து பேட்டிங் செய்ய வந்த கேமரான் கிரீன் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் அடித்திருந்தபோது, அதிரடியாக விளையாடிய கோலி 24 பந்துகளில் 33 ரன்கள் எடுத்திருந்தபோது, யூஸ்வேந்திர சாஹல் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து பேட்டிங் செய்ய வந்த ரஜத் பட்டிதார் அதிரடியாக விளையாடினார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 12.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்திருந்தபோது, 21 பந்துகளில் 27 ரன்கள் அடித்திருந்த கேமரான் கிரீன், ரவிச்சந்திரன் அஸ்வின் பந்தில் ரோவ்மன் பவல் இடம் கேட்ச் கொடுட்து அவுட் ஆனார். அடுத்து வந்த கிளென் மேக்ஸ்வெல், ரவிச்சந்திரன் பந்தில் துருவ் ஜுரெல் இடம் கேட்ச் கொடுத்து கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து பேட்டிங் செய்ய வந்த மஹிபால் லோம்ரோர் அதிரடியாக அடித்து விளையாடினார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 14.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்திருந்தபோது, 22 பந்துகளில் 34 ரன்கள் அடித்திருந்த ரஜத் பட்டிதார், ஆவேஷ் கான் பந்தில் ரியான் பரக் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து தினேஷ் கார்த்திக் பேட்டிங் செய்ய வந்தார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்திருந்தபோது, 13 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே அடித்திருந்த தினேஷ் கார்த்திக், ஆவேஷ் கான் பந்தில் ஜெய்ஸ்வால் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, ஸ்வப்னில் சிங் பேட்டிங் செய்ய வந்தார்.
அதிரடியாக விளையாடிய மஹிபால் லோம்ரோர் 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்தபோது, ஆவேஷ்கான் பந்தில் ரோவ்மன் பவல் இடம் கேட்ச் க்டொஉத்டு அவுட் ஆனார். அடுட்து, கர்ண் ஷர்மா பேட்டிங் செய்ய வந்தார். கர்ண் ஷர்மா சந்தீப் ஷர்மா பந்தில் ரோவ்மன் பவல் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இறுதியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற் இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்தது.
இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் டாம் கோலர் காட்மோர் களமிறங்கினர். சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தித் தந்த இந்த ஜோடியில் டாம் கோலர் காட்மோர் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 45 (30) ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 17 ரன்களும், துருவ் ஜூரெல் 8 ரன்களும் எடுத்து வெளியேறினார்.
அடுத்ததாக, ரியான் பராகுடன், ஹெட்மயர் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ரன் சேர்த்த இந்த ஜோடி, அணியின் ரன்ரேட்டை வேகமாக உயர்த்தியது. தொடர்ந்து அதிரடி காட்டிய இந்த ஜோடியில் ரியான் பராக் 36 (26) ரன்களில் போல்ட் ஆனார். அவரைத்தொடர்ந்து ஹெட்மயர் 26 (14) ரன்களில் கேட்ச் ஆனார்.
இறுதியில் பவெல் 16 (8) ரன்களும், அஸ்வின் ரன் ஏதும் எடுக்காமலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. பெங்களூரு அணியின் சார்பில் சிராஜ் 2 விக்கெட்டுகளும், பெர்குசன், கரண் ஷர்மா மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதன்மூலம் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றது.
இதன்படி நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெளியேறியது. வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்ற ஐதராபாத் அணியுடன் மோத உள்ளது. அதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு 2-வது அணியாக முன்னேறும். ஏற்கனவே கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் தோல்வி அடையும் அணி வெளியேறும். வெற்றி பெறும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்ற ஐதராபாத் அணியுடன் மோத வேண்டும். இந்த மோதலில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு 2-வது அணியாக முன்னேறும்.
நடப்பு சீசனில் சஞ்சு சாம்சன் தலைமையிலான முன்னாள் (2008) சாம்பியன் ராஜஸ்தான் அணி 14 ஆட்டங்களில் 8ல் வென்று 6-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. மறுபுறம், இதுவரை கோப்பையை வெல்லாத பெங்களூரு அணி தனது முதல் 8 ஆட்டங்களில் ஒன்றில் மட்டும் வென்று, அதன்பிறகு, கடைசி 6 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று எழுச்சியுற்றது.
இறுதிப் போட்டிக்கு முன் நடக்கும் குவாலிஃபையர் 2 போட்டிக்கு முன்னேற இரு அணிகளும் கடுமையாக போராடும். பெங்களூருவுக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ராஜஸ்தான் மீண்டும் ஆதிக்கம் செலுத்துமா? என்பதைப் பார்ப்பதில் சுவாரசியமாக இருக்கும். மொத்தத்தில் சமபலத்துடன் இருக்கும் இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
நேருக்கு நேர்
ராஜஸ்தான் - பெங்களூரு அணிகள் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் பெங்களூரு அணி 15 ஆட்டங்களிலும், ராஜஸ்தான் 13 ஆட்டங்களிலும் வென்று இருக்கின்றன. இரண்டு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.