இந்த ஐபிஎல் போட்டியில் குஜராத்தும், லக்னெள அணியும் புதிதாக களம் இறங்கியுள்ளன. இந்த இரு அணிகளும் கடந்த 28ஆம் தேதி மோதின.
ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஹார்திக் பாண்டியாவின் சகோரர் குருணால் பாண்டியா லக்னெள அணியில் இடம்பிடித்துள்ளார்.
சகோதரர்கள் இருவரும் எதிரெதிர் அணியில் இருந்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால் குருணால் பாண்டிய வீசிய பந்தில் மணீஷ் பாண்டேவிடம் கேட்ச் ஆனார் ஹார்திக் பாண்டியா.
'நாங்கள் தோற்று இருந்தால் குருணால் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தது மிகுந்த வேதனையை அளித்து இருக்கும்' என ஹார்திக் பாண்டியாக கூறினார்.
இந்தியா-இங்கிலாந்து ஹாக்கி போட்டி தள்ளிவைப்பு
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆக்கி போட்டி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
3-வது மகளிர் புரோ ஹாக்கி லீக் தொடரில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2 லீக் ஆட்டங்கள் புவனேஸ்வரில் வருகிற 2, 3 ஆகிய தேதிகளில் நடக்க இருந்தது.
இந்த நிலையில் இங்கிலாந்து ஹாக்கி அணி வீராங்கனைகளில் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த போட்டி தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிவேகமாக பந்துவீசும் ஐதராபாத் வீரர்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வென்றது.
இருப்பினும், ஐதராபாத் அணியில் இருந்த பந்துவீச்சாளர்கள் தமிழர் நடராஜன், அறிமுக வீரர் உம்ரான் மாலிக் ஆகியோர் அதிக கவனம் ஈர்த்தனர். இருவரும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
உம்ரான் மாலிக் 4 ஓவர்கள் வீசி 39 ரன்கள் விடுத்துக் கொடுத்த போதிலும் 2 விக்கெட்டுகளை சுருட்டினார்.
இவர் அதிகபட்சமாக 150 கி.மீ. வேகத்தில் பந்துவீசியது கவனிக்க வைத்துள்ளது. உம்ரான் மாலிக், ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர் ஆவார். இவர் ஜம்மு-காஷ்மீர் அணியில் விளையாடி வருகிறார். இந்நிலையில், இந்த ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணியில் இடம்பிடித்துள்ளார்.
இவர் சிறந்த பந்துவீச்சாளராக கவனம் ஈர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படிக்கல் அடித்த சிக்ஸரால் காஸிரங்கா தேசிய பூங்காவுக்கு ரூ.5 லட்சம்
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது ராஜஸ்தான் வீரர் தேவ்தத் படிக்கல் அடித்த சிக்சரால் அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் உள்ள விலங்குகளை பராமரிக்க 5 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.
செங்கல், சிமென்ட்… பில்டிங் கட்டும் சிஎஸ்கே வீரர்கள்… இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ!
அது எப்படி என்று ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா? அதாவது இந்த ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு மைதானத்திலும் பவுண்டரி லைனில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டாடா பஞ்ச் என்ற போர்டில் பேட்ஸ்மேன் அடிக்கும் பந்து பட்டால் அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் உள்ள விலங்குகளை பராமரிக்க 5 லட்சம் ரூபாய் தரப்படும் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது.
ஆனால் இதுவரை யாரும் அடிக்காத நிலையில், இன்று தேவ்தத் படிக்கல் அடித்த பந்து அந்த பலகையில் பட்டதால் ரூ. 5 லட்சம் அந்தப் பூங்காவுக்கு கிடைத்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.