Ruby Trichy Warriors vs Chepauk Super Gillies, 25th Match Tamil News: 8 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி தமிழகத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை லைக்கா கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய 3 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. எஞ்சிய ஒரு இடத்துக்கு மதுரை பாந்தர்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் ஆகிய அணிகளுக்கு டையே போட்டி நிலவி வருகிறது. பால்சி திருச்சி அணி ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது.
இந்நிலையில், டி.என்.பி.எல். இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில், திருநெல்வேலியில் மாலை 3.15 மணிக்கு தொடங்கிய 24வது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ், லைக்கா கோவை கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, 2-வது போட்டியில் பால்சி திருச்சி மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதும் போட்டி ஜூலை 2-ம் தேதி நெல்லையில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
சேப்பாக்கம் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய மதன் குமார் 5 ரன்கள், சந்தோஷ் ஷிவ் 16 ரன்கள் என சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். தொடர்ந்து, பாபா அபரஜித் 10 ரன்களிலும், சஞ்சய் யாதவ் 20 ரன்களிலும், ஜித்தேந்திர குமார் 13 ரன்களிலும், ஹரிஷ் குமார் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து சிபி 31 ரன்களில் ரன் அவுட்டானார். சசிதேவ் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த நிலையில், 20 ஓவர்கள் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி பேட்டிங் செய்தது.
சேப்பாக்கம் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியமால் திருச்சி அணி தொடக்கம் முதல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 13.4 ஓவர்களில் 71 ரன்களில் 10 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது. சேப்பாக்கம் அணியில் சிறப்பாக பந்துவீசிய சிலம்பரசன் 5 விக்கெட் வீழ்த்தினார். சேப்பாக்கம் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil