சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்று கடந்த ஐபிஎல் தொடரில் கலக்கிய ருதுராஜ் கெய்க்வாட் தற்போது நடைபெற்றுவரும் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் சதம் அடித்து அசைக்க முடியாத ஃபார்மில் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநில அணியைச் சேர்ந்த ருதுராஜ் கெய்க்வாட், விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார். ஐபிஎஸ் தொடரைத் தொடர்ந்து, விஜய் ஹசாரே தொடரிலும் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக விளையாடி தனது ஃபார்மை தொடர்கிறார். விஜய் ஹசாரே தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் 5 போட்டிகளில் 4 சதங்களை அடித்து மகாராஷ்டிரா அணி சண்டிகர் அணியை வெற்றி கொண்டபோதும் விஜய் ஹசாரே தொடரில் டி பிரிவில் நாக் அவுட்டில் தகுதி பெற முடியவில்லை.
மகாராஷ்டிரா அணி சண்டிகர் அணியை வெற்றிகொண்டது அந்த அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெற போதுமானதாக இல்லை. கேரளா +0. 974 புள்ளிகளுடனும் மத்தியப் பிரதேசம் +0. 485 புள்ளிகள் பெற்றனர். இந்த அணிகளுடன் மத்தியப் பிரதேசம் ரன் விகிதத்தில் +0. 104 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
டிசம்பர் 22 ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறும் காலிறுதி போட்டிக்கு நேரடியாக முன்னேற, கேரளா அணி இன்னும் 86 பந்துகள் மீதமுள்ள நிலையில், உத்தரகாண்ட் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று டி குழுவில் முதலிடம் பிடித்தது.
மறுபுறம், மத்தியப் பிரதேசம் அணி 2வது இடத்தைப் பிடித்தது. மகாராஷ்டிரா 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியுடன் சத்தீஸ்கர் வெற்றி பெற்று டிசம்பர் 19ம் தேதி ஜெய்ப்பூரில் உத்தரபிரதேசத்தை எதிர்கொள்ளும் முன் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக விளையாடி 635 ரன்கள் குவித்து சிவப்பு தொப்பியைப் பெற்று தொடர் நாயகன் விருதைப் பெற்றார். இந்த நிலையில், மகாராஷ்டிரா அணியில் இடம்பெற்ற ருதுராஜ் கெய்க்வாட் 5 போட்டிகளில் அதிரடியாக விளையாடி 4 சதங்களை அடித்தார். இதன் மூலம், ஐபிஎல் தொடரில் ஆரம்பித்த ருதுராஜ் கெய்க்வாட்டின் அனல் பறக்கும் ஃபார்ம் விஜய் ஹசாரே கோப்பையிலும் தொடர்கிறது.
விஜய் ஹசாரே கோப்பையில் ருதுராஜ் கெய்க்வாட் 136, 154, 124 ரன்கள் குவித்து ஹாட்ரிக் சதம் அடித்து தனது அசைக்க முடியாத ஃபார்மை வெளிப்படுத்தியுள்ளார். இந்த சீசனில் ருதுராஜ் 603 ரன்கள் குவித்து 150.75 சராசரி ரன்கள் குவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”