ruturaj-gaikwad | indian-cricket-team: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் இரண்டு போட்டிகளை வென்றுள்ள இந்திய அணி 2-0 என்கிற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நேற்று அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சாபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி தரப்பில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட் சதம் விளாசி 123 ரன்கள் எடுத்தார். 223 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. அந்த அணியில் மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்திய கிளென் மேக்ஸ்வெல் 104 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
ஆதரவு
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் ரன்களை கட்டுப்படுத்த தவறிய இந்திய அணி பவுலர்களுக்கு தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக போட்டிக்குப் பிறகு பேசிய அவர், "நீங்கள் ஈரமான பந்தில் பந்து வீசுவது போல் இருப்பதால் இது கவலைக்குரியது என்று நான் நினைக்கவில்லை. மேலும் இது அவர்களுக்கு மிகவும் கடினமானது.
இதுபோன்ற சூழ்நிலைகளில், ஒரு ஓவருக்கு 12 ரன்கள் அல்லது ஓவருக்கு 13 அல்லது 14 ரன்கள் கூட எடுக்கலாம். நாங்கள் துரத்தும்போது கூட, முதல் ஆட்டத்தில், 210 ரன்களை எவ்வளவு எளிதாக துரத்தினோம் என்பதை நீங்கள் பார்த்தீர்கள்.
நிச்சயமாக ஒரு கவலையும் இல்லை என்று நான் நினைக்கவில்லை. நிலைமைகள் அவர்களுக்கு சற்று கடினமானவை, நாங்கள் ஏற்றுக்கொண்டு முன்னேற வேண்டும்.
மேக்ஸ்வெல் கூட நன்றாக பேட்டிங் செய்தார் என்று நினைக்கிறேன். ஏழரை மணி நேரத்தில் 100 ரன்களும், 3 ஓவர்களில் 50 ரன்களும் தேவைப்படும் சூழ்நிலையில் இருந்து வெற்றி பெற, இது அவருக்கு முக்கியமான இன்னிங்ஸ் என்று நினைக்கிறேன்.
நமது தரப்பில் இருந்து நமது பந்துவீச்சாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதைச் செயல்படுத்த முயன்றனர். மேலும், சுற்றிலும் பனி அதிகமாக இருந்ததால் பந்து அதிகமாக நழுவியது. எனவே பந்துவீச்சாளர்களுக்கும் இது கடினமாக இருந்தது என்று நினைக்கிறேன்.
நாங்கள் 230 ரன்கள் எடுத்திருந்தாலும், கடைசி ஆட்டத்தில், ஆட்டம் கடைசி ஓவர் வரை செல்லக்கூடும் என்று நாங்கள் உணர்ந்தோம், ஆனால் இந்த வகையான பனியில் எப்படியான ரன்களையும் எளிதில் எடுத்துவிடலாம்." என்று அவர் கூறினார்.
வருகிற வெள்ளிக்கிழமை ராய்ப்பூரில் நடைபெறும் நான்காவது டி20 போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.