South Africa | Afghanistan | T20 World Cup 2024: 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கும் இந்த தொடரில் இந்தியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
இதில், தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் முதல் அரைஇறுதிப்போட்டி இந்திய நேரப்படி வியாழக்கிழமை காலை 6 மணிக்கு டிரினிடாட் தாரூபா நகரில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.
இந்த இரு அணிகளுமே முதல் முறையாக டி20 உலகக்கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. இதில், எந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறினாலும் வரலாறுச் சாதனை தான். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
நேருக்கு நேர்
தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் 2010 மற்றும் 2016 உலகக் கோப்பைகளில் நடந்த டி20 போட்டிகளில் இரண்டு முறை மட்டுமே நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இரண்டு முறையும் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
பிட்ச் ரிப்போர்ட்
பிரையன் லாரா ஸ்டேடியத்தில் உள்ள ஆடுகளத்தில் நடைபெற்ற போட்டிகள் அனைத்தும் குறைந்த ஸ்கோரைக் கொண்டவையாக இருந்தன. நியூசிலாந்து அணிக்கு எதிராக பப்பாவா நியூ கினியா இங்கு வெறும் 78 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதேபோல், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 95 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதே சமயம், உகாண்டா அணி நியூசிலாந்துக்கு எதிராக வெறும் 40 ரன்கள் மட்டுமே எடுத்தது. இரண்டு பெரிய அணிகள் ஒன்றையொன்று எதிர்கொண்டபோது, ஜூன் 12 அன்று நியூசிலாந்துக்கு எதிராக 149 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி அபார வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்.
வானிலை முன்னறிவிப்பு
இந்த போட்டியின் போது மழை குறுக்கீடு இருக்கலாம் என்றும், முக்கியமாக இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டி இரவு 8.30 மணிக்குத் தொடங்கும் என்பதால், போட்டிக்கு இடையே மழையை எதிர்பார்க்கலாம்.
அரையிறுதிக்கு ஏதேனும் சிறப்பு நிபந்தனைகள் மற்றும் விதிகள் உள்ளதா?
முதல் அரையிறுதிக்கு கூடுதல் நேரமும், ரிசர்வ் நாளும் ஒதுக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை போட்டி நேரத்துடன் கூடுதலாக 60 நிமிடங்கள் சேர்க்கப்படும். போட்டி இன்னும் முடிவடையவில்லை என்றால், அது ரிசர்வ் நாளாக மாற்றப்படும். ஜூன் 27 வியாழன் மற்றும் 190 நிமிடங்கள் விளையாடும் நேரம் ஒதுக்கப்படும்.
அரையிறுதி மழை காரணமாக கைவிடப்பட்டால் என்ன ஆகும்?
இந்த இரு அணிகளுக்கு இடையிலான அரையிறுதி மழை காரணமாக கைவிடப்பட்டால், சூப்பர் 8 சுற்றில் முதலிடம் பிடிக்கும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.அப்படிப்பட்ட நிலையில், தென் ஆப்பிரிக்கா இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
தென் ஆப்பிரிக்கா vs ஆப்கானிஸ்தான் நேரலை ஒளிபரப்பு விவரங்கள்
தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் டி20 உலகக் கோப்பை போட்டி ஹாட்ஸ்டார் செயலியில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டு, ஜூன் 27, வியாழன் அன்று காலை 6 மணி முதல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்படும்.
இரு அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியல்:
தென் ஆப்பிரிக்கா: குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி.
ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் சத்ரான், அஸ்மத்துல்லா உமர்சாய், குல்பாடின் நைப், முகமது நபி, கரீம் ஜனத், ரஷீத் கான் (கேப்டன்), நங்கேயாலியா கரோட்டி, நூர் அகமது, நவீன்-உல்-ஹக், ஃபசல்ஹாக் ஃபரூக்கி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.