/indian-express-tamil/media/media_files/rfVVhGxzr3BPOygIja6p.jpg)
டி20 உலகக்கோப்பை தொடர்: தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்
South Africa vs Afghanistan ICC T20 World Cup 2024 1st Semi Final Highlights: 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கும் இந்த தொடரில் இந்தியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
இதில், தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் முதல் அரைஇறுதிப்போட்டி இந்திய நேரப்படி வியாழக்கிழமை காலை 6 மணிக்கு டிரினிடாட் தாரூபா நகரில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் தொடங்கியது.
இந்த இரு அணிகளுமே முதல் முறையாக டி20 உலகக்கோப்பை அரையிறுதிக்கு முன்னேறின.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆப்கானிஸ்தான் அணி 11.5 ஓவரில் 56 ரன் மட்டுமே எடுத்தது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 8.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 60 ரன்களை எடுத்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதன்மூலம் தென்னாப்பிரிக்கா தனது முதல் ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ளது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.