SA vs AUS Highlights: ஆஸி,. மண்ணை கவ்வ வைத்த மார்க்ராம்... புதிய வரலாறு படைத்தது தென் ஆப்ரிக்கா!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி முதன் முறையாக இந்த கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி முதன் முறையாக இந்த கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SA vs AUS LIVE Cricket Score WTC Final 2025 live updates Australia vs South Africa Lords London Tamil News

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா - தென் ஆப்ரிக்க அணிகள் முன்னேறிய நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் அரங்கேறி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 212 ரன்கள் எடுத்தது. 

Advertisment

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும் 

இதனைத் தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சில் 138 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 74 ரன்கள் முன்னிலையுடன் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 207 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணிக்கு 282 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில், 282 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் தென் ஆப்பிரிக்கா நேற்றைய 3-ம் நாள் முடிவில் 56 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 213 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் மார்க்ரம் 102 ரன்னுடனும், பவுமா 65 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். அந்த அணியின் வெற்றிக்கு 69 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 

Advertisment
Advertisements

இந்த நிலையில், களத்தில் இருந்த ஐடன் மார்க்ராம் - கேப்டன் டெம்பா பவுமா ஜோடி இன்றைய ஆட்டத்தை தொடங்கினர். இதில் கேப்டன் டெம்பா பவுமா 66 ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர், ஐடன் மார்க்ராம் - டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி களத்தில் ஆடினர். 

தென் ஆப்பிரிக்க அணி 70 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்தது. இவர்களில், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 8 ரன்களுடன் வெளியேறினார். ஆனால், அபாரமாக ஆடிய ஐடன் மார்க்ராம் 207 பந்துகளில் 14 பவுண்டரிகள் விளாசி 136 ரன்களை குவித்தார். இவரது விக்கெட்டை ஹேசல்வுட் கைப்பற்றினார்.

இதன் பின்னர், களத்தில் டேவிட் பெடிங்கம் மற்றும் கைல் ஆகியோர் கரம் கோர்த்தனர். அதன்படி, தென் ஆப்பிரிக்க அணி 83.4 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி கோப்பையையும் கைப்பற்றியது. 

South Africa vs Australia World Test Championship

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: