T20 World Cup 2024 | United States Of America vs South Africa: 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்ற 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின.
டி20 உலகக்கோப்பை, கிரிக்கெட் தொடரில், சூப்பர் 8 சுற்று அட்டத்தில் அமெரிக்கா - தென் ஆப்பிரிக்கா இடையே போட்டிகள் நடைபெற்ற போட்டியில் அமெரிக்கா போராடி தோல்வி அடைந்தது. தென் ஆப்பிரிக்கா அணி 18 ரன் வித்தியாசத்தில் பரபரப்பு வெற்றி பெற்றது.
டி20 உலகக்கோப்பை, கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் ஜூன் 1-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. லீக் சுற்று முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஜூன் 19-ம் தேதி 'சூப்பர் 8' சுற்று தொடங்கியது.
'சூப்பர் 8' சுற்று ஆட்டத்தில் எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணியும் ஆரோன் ஜோன்ஸ் தலைமையிலான அமெரிக்கா அணியும் மோதின.
டாஸ் வென்ற அமெரிக்கா அணியின் கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணியின் ரீஸா ஹென்ரிக்ஸ் தொடக்கத்தில் 11 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இதையடுத்து, குயின்டன் டி காக் , மார்க்ரம் இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் ரன் விகிதத்தை உயர்த்தினர். அதிரடியாக விளையாடிய குயிண்டன் டிகாக் அரை சதமடித்தார். தொடர்ந்து விளையாடிய குயிண்டன் டிகாக் 74 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மார்க்ரம் 46 ரன்களில் ஆட்டமிழந்தார், கடைசியில் சிறப்பாக விளையாடி கிளாசன் 36 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்தது. அமெரிக்கா அணியின் சார்பில் அதிகபட்சமாக நட்ராவால்கர் மற்றும் ஹர்மித் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அமெரிக்க அணியின் சார்பில் ஸ்டீவன் டெய்லர் மற்றும் அன்ரீஸ் கோஸ் ஆகியோர் களமிறங்கினர். சிறப்பான துவக்கம் தந்த இந்த ஜோடியில் டெய்லர் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நிதிஷ் குமார் 8 ரன்களும், கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் (0) ரன் ஏதும் எடுக்காமலும், கோரி ஆண்டர்சன் 12 ரன்களும், ஜஹாங்கிர் 3 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
அதிரடியாக விளையாடிய கோஸ் அரை சதம் அடித்தார். அவருடன் இணைந்து விளையாடிய, ஹர்மீத் சிங் , அணியின் ரன்ரேட்டை வேகமாக உயர்த்த்தியதோடு, தொடர்ந்து ஆடிய அவர் 38 ரன்களில் வெளியேறினார்.
இறுதி வரை போராடிய ஆண்ட்ரீஸ் கோஸ் 80 (47) ரன்களும், ஜஸ்தீப் சிங் 2 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
அமெரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், தென் ஆப்பிரிக்கா அணி 18 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா-வுக்கு எதிராக அதிகபட்சமாக ரபாடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடித்த இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின. முன்னாள் சாம்பியன்கள் பாகிஸ்தான், இலங்கை மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட 12 அணிகள் லீக் சுற்றுடன் வீட்டு நடையைக் கட்டின
சூப்பர் 8 சுற்றில் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் 1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், குரூப் 2-ல் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில், ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். அதில் வெல்லும் அணிகள் வருகிற 29 ஆம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் மல்லுக்கட்டும்
சூப்பர் 8 சுற்று தொடக்கம்
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்தி வரும் நிலையில், லீக் ஆட்டங்கள் மட்டுமே அமெரிக்காவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. சூப்பர் 8 சுற்றில் இருந்து இனி எல்லா ஆட்டங்களும் வெஸ்ட் இண்டீசில் மட்டுமே நடைபெற உள்ளது.
இந்நிலையில், இன்று (புதன்கிழமை) முதல் தொடங்கும் சூப்பர் 8 சுற்றில் முதல் நாளில் இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஆன்டிகுவாவில் உள்ள சர்விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் அரங்கேறும் ஒரு ஆட்டத்தில் எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க மோனக் பட்டேல் தலைமையிலான அமெரிக்காவை எதிர்கொள்கிறது.
நடப்பு தொடரில் தென் ஆப்பிரிக்காவின் பேட்டிங் இதுவரை போட்டியில் பலவீனமாகவே காணப்பட்டது, இருப்பினும், பவுன்ஸ் எகிறிய நியூயார்க் ஆடுகளங்களில் விளையாடியதே இதற்குக் காரணம். மறுபுறம், அமெரிக்க அணி ஒரே யூனிட்டாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஆனால் அவர்களால் தென் ஆப்பிரிக்காவை சமாளிக்க முடியுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இரு அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியல்
அமெரிக்கா: மோனாங்க் படேல் (கேப்டன்), ஸ்டீவன் டெய்லர், ஆண்ட்ரீஸ் கௌஸ், ஆரோன் ஜோன்ஸ், நிதிஷ் குமார், கோரி ஆண்டர்சன், ஹர்மீத் சிங், ஷாட்லி வான் ஷால்க்விக், ஜஸ்தீப் சிங், சவுரப் நேத்ரவல்கர், அலி கான்.
தென் ஆப்பிரிக்கா: குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, ஒட்னீல் பார்ட்மேன், தப்ரைஸ் ஷம்சி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.