மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. கடந்த 28 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் இந்த தொடரில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், பாரிஸ் பாராஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான குண்டு எறிதல் எப். 46 பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சச்சின் சர்ஜிராவ் கிலாரி 16.32 மீட்டர் தூரம் எறிந்து 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.
பாரிஸ் பாராஒலிம்பிக்கில் இந்திய அணி இதுவரை 3 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 21 பதக்கங்களைப் பெற்று 19-வது இடத்தில் உள்ளது.
வாழ்த்து
இந்நிலையில், வெள்ளிப் பதக்கம் வென்ற சச்சின் சர்ஜிராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "பாரா ஒலிம்பிக் தொடரில் வலிமையுடன் செயல்பட்டு வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்த சச்சின் சர்ஜிராவுக்கு வாழ்த்துகள்.அவரை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது" என தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“