வாவ் சச்சின்: நள்ளிரவில் மெட்ரோ ஊழியர்களுடன் கிரிக்கெட் மேட்ச்!

மெட்ரோ தொழிலாளர்களுடன் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாடினார்

மகாராஷ்டிரா மாநிலத்தின் பந்த்ரா பகுதியில் இரவு நேரத்தில் மெட்ரோ தொழிலாளர்களுடன் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாடி அவர்களை ஆச்சர்யப்படுத்தி உள்ளார்.

மகாராஷ்டிராவின் பந்த்ரா பகுதியில் சச்சின் டெண்டுல்கரின் இல்லம் உள்ளது. அங்கு மெட்ரோ பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் இரவு நேரத்தில் கிரிக்கெட் விளையாடியுள்ளனர். அப்போது காரில் அப்பகுதியை கடந்து செல்லும் போது அதனை கண்ட சச்சின், திடீரென காரை நிறுத்தச் சொல்லி அவர்களுடன் கிரிக்கெட் விளையாடியுள்ளார். சிறிது நேரம் பேட்டிங் செய்த அவர் பின்னர் தொழிலாளர்களுடன் புகைப்படம் எடுத்து விடைபெற்றார்.

இதனால், அந்த தொழிலாளர்கள் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றனர்.

×Close
×Close