மாஸ்டர் பிளேஸ்டர் சச்சின் இன்று தனது 45வது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடுகிறார். அத்துடன் அவரின் ரசிகர்களுக்கு இன்று மிகப்பெரிய சர்ப்ரைஸ் காத்துக் கொண்டு இருக்கிறது.
”சச்சின் சச்சின்” ”சச்சின் சச்சின்” அரங்கத்தில் இப்படி அடி தொண்டையில் இருந்து கத்தியவர்களுக்கு தெரியும் அந்த ஃபீல் எப்படி இருக்கும் என்று. கிரிக்கெட்டின் கடவுளாக ரசிகர்களால் கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்க்கையில் 45 ஆவது சதம்.
தன்னுடைய 16 ஆவது வயதில் பேட்டை பிடித்த சச்சின், இன்றும் அவரின் ரசிகர்களுக்கு ஃபீல்டில் இருக்கும் ஹீரோ தான். கடந்த 2012ம் ஆண்டு ஒருநாள் போட்டி தொடரிலிருந்து சச்சின் ஒய்வு பெற்ற பிறகு கிரிக்கெட்டையே பார்க்க மாட்டோம் என்று சென்றவர்கள் ஏராளம் பேர்.
அதைத்தொடர்ந்து, 2013 ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிக்கும் சச்சின் பாய் பாய் சொல்லிவிட்டார். ஃபீல்ட்டை விட்டு சென்றாலும் இப்போதும் சச்சின் அரங்கத்திற்கு வந்தால் போதும், அரங்கமே அதிரும். கிரிக்கெட்டுக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட சச்சினின் சாதனைகளை பாராட்டும் விதமாக அர்ஜூனா விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, பத்மஸ்ரீ விருது, பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை வழங்கி அரசு கெளரவித்துள்ளது.
இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடும் சச்சினுக்கு வாழ்த்து கூறும் விதமாக, அவரது வீட்டருகில் நள்ளிரவு முதல் ரசிகர்கள் குவிந்துள்ளனர். பலரும் சமூக வலைதளங்களில் சச்சினுக்கு தங்களுடைய வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.
,
Here's a small pre-birthday surprise for you all!! I'll be live chatting with you all on the afternoon of the 24th on my app #100MB. Stay tuned for updates and see you there.https://t.co/jIoKVw6rUp pic.twitter.com/NtECIBctgt
— Sachin Tendulkar (@sachin_rt) April 23, 2018
இன்றும் களத்தில் சிங்கமாகவே கர்ஜிக்கும் சச்சின் அவருடை ரசிகர்களுக்கு இன்று மதியம் சர்ப்ரைஸ் ஒன்றை தர இருக்கிறார். இதுக்குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் சச்சின் பதிவு செய்துள்ள தகவலில், ‘பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு முன்பாக உங்கள் அனைவருக்கும் இதோ ஒரு சர்ப்ரைஸ்! ஏப்ரல் 24 மதியம் எனது #100MB ஆப்-ல் லைவ் சாட் செய்ய காத்திருக்கிறேன். தொடர்பில் இருங்கள்... சந்திக்கலாம்’
என்ன நீங்க ரெடியா?????
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.