Sachin Tendulkar, Brian Lara to play T20 tournament in India - மீண்டும் கிரிக்கெட் களத்தில் சச்சின், லாரா! அதுவும் நம்ம இந்தியாவில்
அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் சாலை பாதுகாப்பு உலகத் தொடருக்கான போட்டிகளில் விளையாட முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரையன் லாரா ஆகியோர் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்புகின்றனர்.
Advertisment
ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா ஆகிய ஐந்து நாடுகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கிடையில் ஆண்டுதோறும் நடைபெறும் இருபதுக்கு -20 போட்டியாக உலகத் தொடர் இருக்கும்.
பிப்ரவரி 2-16 முதல் இந்தியா முழுவதும் நடைபெறும் இந்த போட்டிகளுக்காக சச்சின் மற்றும் லாரா ஆகியோருடன் முன்னாள் வீரர்களான வீரேந்திர சேவாக், பிரட் லீ, தில்ஷன் மற்றும் ஜான்டி ரோட்ஸ் ஆகியோர் இணைந்து விளையாடுகின்றனர்.
Advertisment
Advertisements
மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினையும், தி கிரேட் லாராவையும் மீண்டும் இணைந்து ஆடுகளத்தில் காண்பது நிச்சயம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.