கிரிக்கெட்டில் மட்டுமல்ல ஹேர் கட் செய்வதிலும் சச்சின் தான் கிங் : வைரலாகும் வீடியோ

Sachin haircut video : சச்சின்,தனது 20 வயது மகன் அர்ஜுன் டெண்டுல்கரின் தலைமுடியை வெட்டிக் கொண்டிருக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்

By: May 20, 2020, 8:45:38 AM

கிரிக்கெட் உலகின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், தனது மகன் அர்ஜூனுக்கு ஹேர்கட் செய்யும் வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த மார்ச் 24ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட தேசிய ஊரடங்கு நான்காவது முறையாக வரும் மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் காரணமாக திரைநட்சத்திரங்கள், கிரிக்கெட் பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவரும் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

சலூன் கடைகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருவதால், பிரபலங்கள் தங்களுக்குள்ளே ஹேர்கட் செய்து அதனை வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர். அந்த பட்டியலில் தற்போது புதிதாக இணைந்துள்ளார் கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர்.

சச்சின் டெண்டுல்கர், தனது பேட்டிங் திறமைக்காக உலகம் முழுவதும் அறியப்பட்டவர். அவருடைய ஒரு பதிவில், தான் வித்தியாசமான காரியங்களைச் செய்வதை விரும்புவதாக வெளிப்படுத்தியிருந்தார். தனது சொந்த முடியை வெட்டிய ஒரு மாதத்திற்குப் பிறகு, சச்சின் தனது மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு முடிதிருத்துபவராக மாறி, லாக்டவுனின் போது அவருக்கு ஹேர்கட் செய்தார். சச்சின்,தனது 20 வயது மகன் அர்ஜுன் டெண்டுல்கரின் தலைமுடியை வெட்டிக் கொண்டிருக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். வீடியோவைப் பகிர்ந்த அவர், உதவியாளராக இருந்த அவருடைய மகள் சாராவுக்கு நன்றி தெரிவித்தார். “ஒரு தந்தையாக அனைத்து விஷயங்களையும் செய்ய வேண்டும். குழந்தைகளுடன் விளையாடுவதாக இருந்தாலும், ஒன்றாக ஜிம்முக்கு செல்வதாக இருந்தாலும் அல்லது அவர்களுக்கு முடி வெட்டுவதாக இருந்தாலும் செய்ய வேண்டும். ஹேர் ஸ்டைல் எப்படி வந்தாலும், நீ அழகாக தான் இருப்பாய் @arjuntendulkar24. சலூன் உதவியாளராக இருந்த @saratendulkarக்கு சிறப்பு நன்றி,” என்று டெண்டுல்கர் வீடியோவுக்கு தலைப்பிட்டார்.

கடந்த மாதம், தானாகவே ஹேர்கட் செய்துகொண்ட சச்சின் டெண்டுல்கர், “ஸ்கொயர் கட்ஸ் விளையாடுவதிலிருந்து, சொந்த ஹேர்கட் செய்வது வரை, எப்போதும் வித்தியாசமான விஷயங்களைச் செய்து மகிழ்கிறேன். என்னுடைய புதிய ஹேர்கட் எப்படி உள்ளது @aalimhakim & @nandan_v_naik?” என்று தன்னுடைய புகைப்படத்துக்குத் தலைப்பிட்டு இருந்தார்.

இந்திய கேப்டன் விராட் கோலியும் லாக்டவுன் அறிவித்த சில நாட்கள் கழித்து, மனைவி அனுஷ்கா ஷர்மாவிடம் ஹேர்கட் செய்துகொண்டார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த சதேஷ்வர் புஜாரா, தன்னுடைய மனைவியிடம் ஹேர்கட் செய்துகொண்டார். அதில் அவர், “களத்தில் 99* ரன்கள் எடுத்து சதமடிக்க ஒரு ரன் தேவைப்படும் போது பார்ட்னரை நம்புவதா அல்லது ஹேர்கட் செய்யும் மனைவியை நம்புவதா?” என்று வேடிக்கையாகப் புகைப்படத்துடன் தலைப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Sachin tendulkar corona virus lockdown arjun tendulkar hair cut instagram

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X