முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் படத்தை வைத்து டீப் ஃபேக் வீடியோ மூலம் ஆன்லைன் செயலிக்கு விளம்பரம் செய்யப்பட்டதை அடுத்து, சச்சின் டெண்டுல்கர் கவலை தெரிவித்துள்ளார்.
அண்மையில், நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிகை ஆலியா பட் முகங்களை வைத்து உருவாக்கப்பட்ட டீப் ஃபேக் வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் டீப் ஃபேக் வீடியோக்கள் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
நடிகை ராஷ்மிகா மந்தனா, ஆலியா பட் டீப் ஃபேக் வீடியொ வரிசையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை வைத்து உருவாக்கப்பட்ட டீப் ஃபேக் வீடியோ அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட் ஜாம்பவன் சச்சின் டெண்டுல்கரின் முகத்தை வைத்து டீப் ஃபேக் வீடியோ உருவாக்கி ஆன்லைன் செயலிக்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அந்த செயலி மூலம் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா டெண்டுல்கர் அதிக அளவில் பணம் சம்பாதிப்பதாக தான் பேசுவது போன்ற வீடியோ பரப்பப்படுகிறது என்று சச்சின் டெண்டுல்கர் கவலை தெரிவித்து பகிர்ந்துள்ளார்.
மேலும், இது போன்ற போலி வீடியோக்களைப் பரப்புவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“