ஒலோங்கா ஜிம்பாப்வேயில் ஏற்பட்ட அரசியல் பேரழிவின் பிரதிபலிப்பாக 2003 உலகக் கோப்பையின் போது கையில் கருப்பு பட்டை அணிந்தார்.
Henry Olonga - Zimbabwe - Sachin Tendulkar Tamil News: ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியில் அதிவேகப் பந்துவீச்சாளராக இருந்தவர் ஹென்றி ஒலோங்கா. கடந்த 1995ம் ஆண்டு அணியில் இணைந்த இவர் 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2620 ரன்கள் மற்றும் 68 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதேபோல், 50 ஒருநாள் போட்டிகளில் 1977 ரன்கள் மற்றும் 58 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவரது நாட்களில் ஜிம்பாப்வேயில் அதிகம் மதிப்பிடப்பட்ட வேகப்பந்து வீச்சாளராக இருந்த ஒலோங்கா, நாட்டுக்காக விளையாடிய முதல் கறுப்பின கிரிக்கெட் வீரர் ஆவார்.
Advertisment
ஒருமுறை ஒலோங்கா இந்திய ஜாம்பவான் வீரரான சச்சின் டெண்டுல்கரை ஆட்டமிழக்க செய்து அவரை மிகவும் வருத்தமடைய செய்து இருந்தார். 'அடுத்த இரண்டு நாட்களுக்கு அவர் தூங்கவில்லை. அது அவரை முற்றிலும் மாற்றியது' என்றும் முன்னாள் இந்திய அணி வீரர் அஜய் ஜடேஜா குறிப்பிட்டார். அந்த அளவிற்கு மிக துல்லியமாக பந்துகளை வீசி மிரட்டி இருந்தார் ஒலோங்கா.
அவர் சச்சின் டெண்டுல்கரை மட்டுமல்ல, இந்தியாவின் நட்சத்திர வீரர்களான சவுரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் போன்றோரது விக்கெட்டையும் கைப்பற்றினார். இருப்பினும், அவரது செழிப்பான 8 வருட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை எதிர்பாராத முடிவுக்கு வந்தது. அவரது துணிச்சலான கருத்துக்கள் மற்றும் நிலைப்பாடுகளுக்கு பெயர் பெற்ற, ஒலோங்கா ஜிம்பாப்வேயில் ஏற்பட்ட அரசியல் பேரழிவின் பிரதிபலிப்பாக 2003 உலகக் கோப்பையின் போது கையில் கருப்பு பட்டை அணிந்தார்.
Advertisment
Advertisements
இது மரண அச்சுறுத்தல் மற்றும் ஒலோங்காவைக் கைது செய்வதற்கான வாரண்டைத் தொடர்ந்து வந்தது. அதனால் அவர் இங்கிலாந்துக்கு நாடுகடத்தப்பட்டார். ஒலோங்கா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 2003ல் ஓய்வு பெற்ற நிலையில், அவரது எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க சில வருடங்கள் எடுத்துக் கொண்டார். பின்னர், பாடல் பாடுவதை தனது தொழிலாக எடுத்துக் கொள்ள முடிவு செய்தார்.
பின்னர், ஒலோங்காவும் அவரது மனைவியும் ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டுக்கு குடிபெயர்ந்தனர். அவர் வீட்டிலேயே இருக்கும் அப்பாவாகவும், சுயதொழில் பாடகராகவும் ஆனார். அவருடைய மனைவி வீட்டு நிலையைக் கவனித்துக்கொள்வதற்காக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். 2019 ஆம் ஆண்டில் 'தி வாய்ஸ்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இடம்பெறுவதற்கு ஆச்சரியமான அழைப்பைப் பெற்றபோது ஒலோங்கா சில முக்கியத்துவத்தைப் பெற்றார். ஆனால் அது நட்சத்திர அந்தஸ்துக்கு வழிவகுக்கவில்லை.
கொரோனா தொற்று பரவல் ஒலோங்காவுக்கு மிகவும் கடினமான நேரங்களைக் கொண்டுவந்தது. ஏனெனில் அவர் வேலையில்லாமல் இருந்தார். அரசின் நிவாரணத் திட்டத்திலிருந்து மட்டுமே தனது குடும்பத்தை பாதுகாக்க முடிந்தது. 2021ம் ஆண்டு அவரது வாழ்க்கையில் மிகவும் கடினமான ஆண்டு அமைந்து போனது. தற்போது ஒலோங்கா தனது இரண்டாவது இன்னிங்ஸில் அமைதியான வாழ்க்கை வாழ்கிறார். அவர் தனது குழந்தைகளை பள்ளியில் சேர்த்துவிட்டு, அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்து, யூடியூப் சேனல் மூலம் தனது இசை வாழ்க்கையை உருவாக்க முயற்சி செய்து வருகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil