Sachin Tendulkar on Oval pitch Tamil News: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியானது இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்க உள்ளது. இந்நிலையில், போட்டி நடைபெறும் லண்டன் ஓவல் மைதானத்தின் ஆடுகளம் குறித்து முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஓவல் மைதானத்தின் ஆடுகளம் குறித்து பேசியுள்ளார். சுழலுக்கு ஏற்ற ஓவல் ஆடுகளம், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவை ஒரு நம்பிக்கையான அணியாக மாற்றும் என்றும் அவர் கருதுகிறார்.
"இந்திய அணி ஓவல் மைதானத்தில் விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கும். ஓவல் ஆடுகளத்தின் தன்மை, போட்டி நடக்கும் போது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவும் வகையில் உள்ளது. எனவே, அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டத்தில் முன்னேற்றம் காண்பார்கள்.
ஆடுகளங்கள் எப்போதும் நன்கு திருப்பும் அல்லது சுழலுபவையாக இருக்க வேண்டியதில்லை. சில நேரங்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் பவுன்ஸை சார்ந்து இருப்பார்கள். சில சமயங்களில் பிட்ச்சில் இருந்து வெளியேறும் சிறிதளவு ஜிப் நிலையை நம்பி இருப்பார்கள். மேல்நிலை நிலைமைகள் மற்றும் அது பந்தின் பளபளப்பான பக்கத்தைப் பொறுத்தது.
“அவர்களால் அந்த சறுக்கலைப் பெற முடிந்தால், ஆடுகளம் விளையாடாமல் பந்தை காற்றில் பேச வைக்க முடியும். எனவே, ஓவல் இந்தியாவிற்கு நல்ல இடமாக இருக்கும், ”என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.