நான்கு வருடத்திற்கு முன்பு இந்த நாளில் பல்லாயிர மக்கள் மும்பை வான்கேடே மைதானத்தில் குவிய, பல லட்ச மக்கள் கணத்த இதயத்துடன் தொலைக்காட்சி முன் ஆஜர் ஆகினர்.
அன்று, மேற்கு இந்திய அணி தனது இரண்டாவது டெஸ்ட் இன்னிங்சை ஆடி கொண்டு இருந்தது, இந்திய அணியை சேர்ந்த ரோஹித் ஷர்மா பல நூறு ரன்கள் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் வளர்ந்து கொண்டிருந்தார். இது போன்ற பல நிகழ்வுகள் இருந்தாலும் கிரிக்கெட் ரசிகர்கள் எவருக்கும் அது பொருட்டாக படவில்லை. அன்றைய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெறுமா என்ற அக்கறை கூட யார் மனதிலும் இல்லை. ஆனால் அன்று அனைத்து இந்திய ரசிகர்களின் மனதில் ஓடியது இந்த ஆட்டத்தின் கடைசி பந்தோடு தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் முடித்துக் கொள்ள போகிறார் என்பது மட்டும் தான்.
24 வருடத்திற்கு முன்பு பாகிஸ்தானுக்கு எதிராய் தொடங்கிய தன் கிரிக்கெட் பயணத்தை சச்சின் முடித்து கொண்டு விடைபெற்ற தினம் இது. பல லட்ச மக்கள் பார்த்து ரசித்த, பல கிரிக்கெட் வீரர்களுக்கு முன்மாதிரியாக இருந்த கிரிக்கெட்டின் கடவுளாக கருதப்படும் சச்சின் பல நினைவுகளை விட்டு விட்டு விடை பெற்றார்.
/tamil-ie/media/media_files/uploads/2017/11/sachin-1-3-300x204.jpg)
அக்டோபர் மாதம் சச்சின் தனது ஓய்வை அறிவித்த போதிலிருந்து நாடு முழுவதும் உள்ள பல கிரிக்கெட் ரசிகர்கள் திகைத்து போயினர். ஓய்வை அறிவித்து ஒரு மாதத்திற்கு பிறகு மேற்கிந்திய அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் தொடர்கள் விரைவில் நடத்தப்பட்டது. அதில் இறுதி ஆட்டத்தை தன் சொந்த மண்ணில் ஆடி முடித்தார் டெண்டுல்கர்.
மும்பை வான்கேடே மைதானம் டெண்டுல்கரின் தனித்துவமான பல சிறப்பு ஆட்டங்களை பார்த்துள்ளது. தனது இறுதி டெஸ்ட் ஆட்டத்தில் டெண்டுல்கர் 118 பந்துகளை சந்தித்து 74 ரன்களை எடுத்தார். அவர் மைதானத்தில் இருந்த 150 நிமிடங்களும் ரசிகர்கள் கணத்த இதயத்துடனும் ரசித்து கொண்டிருந்தனர். பலர் மைதானத்தில் அழுவதை கூட நாம் கண்டோம். அவர் விளாசிய ஒவ்வொரு பௌண்ட்ரிக்கும் ரசிகர்கள் களிப்படைந்தனர்.
/tamil-ie/media/media_files/uploads/2017/11/sachin1_2-300x204.jpg)
நர்சிங் தேனாரைன் பந்தை டெண்டுல்கர் எதிர் கொள்ள ஸ்லிப்பில் இருந்த டேரன் சமி கை பற்றினார். ஆனால் மேற்கிந்திய அணி அந்த விக்கெட்டை கொண்டாடவில்லை. இத்தகைய தாக்கத்தை தான் டெண்டுல்கர் தன் பயணத்தில் ஏற்படுத்தியுள்ளார். ஒரு சில நொடிகள் மைதானம் ஸ்தம்பிக்க, அங்கு குவிந்திருந்த ரசிகர்கள எழுந்து நின்று கைதட்டி அவரை வழி அனுப்பினர். உணர்ச்சிவசப்பட்டு பல ரசிகர்கள் அழ, அவர் உள்ளே செல்லும் வரை கை தட்டலை நிறுத்தவில்லை.
அடுத்த நாள் நவம்பர் 16 மேற்கிந்திய அணியின் அனைத்து விக்கெட்டையும் இந்தியா கை பற்றி வெற்றி பெற்றனர். தன் கடைசி ஆட்டத்தை முடித்த சச்சின் டெண்டுல்கரை இந்திய அணி மரியாதையுடன் வழி அனுப்பியது. இந்திய அணி மரியாதை செய்ய கண்ணிருடன் மைதானத்தில் இருந்து வெளி ஏறினார் டெண்டுல்கர்.
இதனை தொடர்ந்து கடைசியாக டெண்டுல்கர் அளித்த பெட்டி உலகில் உள்ள அனைத்து ரசிகர்களையும் கண்ணீரில் ஆழ்த்தியது. அத்துடன் சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் இருந்து விடை பெற்றார் சச்சின் டெண்டுல்கர்.