இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், இந்திய கிரிக்கெட் அணியில் ஆரம்ப காலத்தில் தோனி நடந்துகொண்ட விதம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன், ஐசிசி நடத்தும் அனைத்து விதமான தொடர்களையும் இந்திய அணிக்காக வென்று சாதனை படைத்தவர், கேப்டன் கூல் என பல பெருமைகளுக்கு சொந்தக்காரர் மகேந்திர சிங் தோனி. சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தோனி, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
ஆங்கிலத்தில் படிக்க : Sachin Tendulkar shares why MS Dhoni never used to sit next to him in his early days
இதனிடையே மகேந்திர சிங் தோனி, இந்திய அணியில் புதியவராக இருந்தபோது நடந்த சில சம்பவங்களை சச்சின் டெண்டுல்கர் நினைவு கூர்ந்துள்ளார். சச்சின் தோனியை முதன்முதலில் பார்த்தது, மற்றும் 2007 ஆம் ஆண்டு நடந்த டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக அவரது பரிந்துரைத்தது ஏன் என்பது குறித்து சச்சின் மனம் திறந்து பேசியுள்ளார்.
தோனியுடன் முதல் சந்திப்பு
2003-04 இல் வங்கதேச சுற்றுப்பயணத்தின் போது தோனியை முதன்முதலில் பார்த்தேன். ஒரு போட்டியில் அவர் கடைசியில் ஓரிரு ஷாட்களை ஆடினார். அவனுடைய பேட்டிலிருந்து நான் கேட்ட அந்த சத்தம் வித்தியாகமாக இருந்தது, நான் உடனே சௌரவ் (கங்குலி) பக்கம் திரும்பி, “தாதா “அவர் பந்தை அடிக்கும்போது வித்தியாசமாக இருக்கிறது என்று சொன்னேன்.
"பெரிய ஹிட்டர்களுக்கு இந்த சிறப்பு உள்ளது, அவர்கள் அதை அடிக்கும்போது அது தூரத்திற்கு செல்கிறது என்று நீங்கள் நினைப்பீர்கள், ஆனால் நாம் எதிர்பார்க்கும் தூரத்தை விட 10 கெஜம் அதிகமாக பயணிக்கும். அந்தத் தரத்தை தோனியின் பேட்டிங்கில் நான் கண்டேன்,” என்று சச்சின் ஜியோ இன்சைடரில் தெரிவித்துள்ளார்.
கூச்ச சுபாவமுள்ள எம்இஎஸ் தோனி
எம்.எஸ். தோனி விமானத்தில் எனக்கு அருகில் அமரவில்லை. "சில வீரர்கள் என்னிடம் சொன்னார்கள், விமானத்தில் பெரும்பாலான நேரம் அவரது இருக்கை எனக்கு அடுத்ததாக இருக்கும், ஆனால் அவர் அதை வேறு சில வீரர்களுடன் மாற்றிக்கொள்வார். சில ஆண்டுகளாக, அவர் என் அருகில் உட்காரவே இல்லை. பின்னர் நாங்கள் ஒருவருக்கொருவர் அருகருகே உட்கார ஆரம்பித்தோம். அவர் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவர் என்பது எனக்குத் தெரியாது, அதனால்தான் அவர் தனது இருக்கைகளை மாற்றிக் கொண்டார்.
கேப்டன்சி
2007 ஆம் ஆண்டில் பிசிசிஐ எனக்கு மீண்டும் கேப்டன் பதவியை வழங்கியபோது, நான் எம்எஸ் தோனியின் பெயரை கேப்டன் பதவிக்கு பரிந்துரைத்தேன். எனக்கு கேப்டன் பதவியை வழங்கியபோது என் உடல் மோசமான நிலையில் இருந்தது. “எம்.எஸ் தோனியைப் பற்றிய எனது கணிப்பு மிகவும் நன்றாக இருந்தது. அவரது மனம் மிகவும் நிலையானது, அவர் அமைதியானவர், அவர் உள்ளுணர்வு மற்றும் சரியான முடிவுகளை எடுப்பார். அதனால் நான் அவரை கேப்டன் பதவிக்கு பரிந்துரைத்தேன் என்று கூறியுள்ளார்..
ஐபிஎல் 2024ல் தோனியின் முதல் ஆட்டம்
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் கேப்டனாக இருந்த எம்.எஸ்.தோனி, 2024 ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முதல் நாள் கேப்டன் பதவியில் இருந்து விலகி ருதுராஜ் கெய்க்வாட்க்கு பொறுப்பை ஒப்படைத்துள்ளார். நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
சென்னை தோனியின் பேட்டிங் தேவையில்லை என்றாலும், முன்னாள் கேப்டன் விக்கெட்டுக்கு பின்னால் இன்னும் திறமையாக செயல்படுகிறார் என்பது நேற்றைய போட்டியில் தெளிவாக தெரிந்தது. இரண்டு கேட்சுகளை பிடித்த தோனி, இறுதியில் அனுஜ் ராவத்தை ரன் அவுட் செய்தார் மற்றும் முடிவெடுப்பதில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.