Advertisment

சச்சினுக்கு சிலை; ஃப்ரீயா பாப்கார்ன், கூல் ட்ரிங்ஸ் - அமர்களப்படுத்தும் மும்பை வான்கடே ஸ்டேடியம்!

உலகக் கோப்பை போட்டிகளைக் காண வான்கடே மைதானத்திற்கு வருகை தரும் ரசிகர்களுக்கு இனி இலவச பாப்கார்ன் மற்றும் குளிர் பானங்கள் வழங்கப்படும் என மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்.சி.ஏ) அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Sachin Tendulkar statue and free popcorn cold drink for fans on 2 November at Wankhede Tamil News

இந்த ஆண்டு பிப்ரவரியில், எம்.சி.ஏ தலைவர் அமோல் காலே, மைதானத்தில் உள்ள சச்சின் டெண்டுல்கரின் ஸ்டாண்ட் அருகே அவருக்கு சிலை வைத்து கவுரவிக்க வாரியம் முடிவு செய்துள்ளதாக கூறியிருந்தார்.

worldcup 2023 | Wankhede Stadium | sachin-tendulkar: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் களமாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் ஐந்திலும் வெற்றியைப் பெற்று எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறது. 

Advertisment

இந்நிலையில், இந்திய அணி அதன் அடுத்த லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை சந்திக்க உள்ளது. இந்தப் போட்டியானது வருகிற ஞாயிற்றுக்கிழமை உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி நவம்பர் 2ம் தேதி இலங்கையை மும்பையில் வைத்து எதிர்கொள்கிறது. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Cricket World Cup: Free popcorn and cold drink to be given to all fans at Wankhede Stadium

சச்சினுக்கு சிலை

இந்த நிலையில், இந்தியா - இலங்கை அணிகள் மோதும் போட்டியின் போது இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரரான  சச்சின் டெண்டுல்கரின் சிலை மும்பை கிரிக்கெட் சங்கத்தால் (எம்.சி.ஏ) வான்கடே மைதானத்தில் திறக்கப்பட உள்ளது. இதற்காக சச்சினின் சிலை தயார் நிலையில் உள்ளது. 

மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல கலைஞர் ஒருவரால் இந்த சிலை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பிப்ரவரியில், எம்.சி.ஏ தலைவர் அமோல் காலே, மைதானத்தில் உள்ள சச்சின் டெண்டுல்கரின் ஸ்டாண்ட் அருகே அவருக்கு சிலை வைத்து கவுரவிக்க வாரியம் முடிவு செய்துள்ளதாக கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து, 50 வயதான சச்சினின் சிலை தயாரிப்புக்கான பணிகள் நடைபெற்று வந்தது. 

இதுதொடர்பாக பேசிய  எம்.சி.ஏ தலைவர் அமோல் காலே, “பாரத ரத்னா சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டுக்கு அவர் என்ன பங்களித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். அவருக்கு 50 வயதாகும் போது, ​​மும்பை கிரிக்கெட் சங்கத்தின் பாராட்டுக்கான சிறிய அடையாளமாக இது இருக்கும். நான் 3 வாரங்களுக்கு முன்பு அவருடன் பேசினேன். இந்த விஷயத்தில் அவரது சம்மதத்தைப் பெற்றேன், ”என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் அவர் தெரிவித்தார். 

மார்ச் மாதம், டெண்டுல்கர் தனது சிலை வைக்கப்படும் இடத்தை பார்வையிட்டார். அப்போது பேசிய அவர் "கமிட்டி என்னை வழிநடத்தினார்கள். எம்.சி.ஏ லவுஞ்சிற்கு வெளியே உள்ள பகுதியில், ஒரு ரவுண்டானா உருவாக்கப்படும். சிலை அங்கு வைக்கப்படும். அதன் பின்னணியில் மைதானம் இருக்கும், எங்கள் செயல்கள் அனைத்தும் அங்கே (கிரவுண்டிற்குள்) நடந்துள்ளது. ரசிகர்கள் கூட்டமாக வந்து புகைப்படங்களை கிளிக் செய்யலாம், அதே நேரத்தில் அதனை நேரடியாக பார்த்து விட்டு செல்லலாம். 

எனது பயணம் இங்கிருந்துதான் தொடங்கியது, நான் வித்யாமந்திரில் படிக்கும் சீனியர் டீமுக்கு சப்போர்ட் செய்ய இந்த மைதானத்திற்கு வந்திருந்தேன். நான் எனது போட்டியை விட்டு வெளியேறினேன், அப்போதுதான் அச்ரேக்கர் என்னைக் கண்டித்தார். பயணம் அங்கிருந்து தொடங்கியது. 

மும்பை கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய அந்த குழந்தைகளை பால் பாய்களாக வைத்திருந்தனர். நானும் இங்கே ஒரு பால்பாய் ஆக இருந்தேன். நான் மும்பை முதல்தர கிரிக்கெட்டை இங்கு விளையாடினேன், எனது பெரிய தருணங்கள் அனைத்தும் இந்த இடத்தில் நடந்தது. 

என்னைப் பொறுத்தவரை, எனது வாழ்க்கையில் மிகப்பெரிய தருணம் 2011 உலகக் கோப்பையில் வந்தது, அது இந்த மைதானத்தில் நடந்தது. எனது ஓய்வும் இங்குதான் நடந்தது, இந்த மைதானத்துடன், எனக்கு அதன் மீது ஒரு உணர்ச்சிப்பூர்வமான பற்றுதல் உள்ளது, அதை என்னால் எதனுடனும் ஒப்பிட முடியாது.”என்று அவர் கூறினார்.

2011ல் மும்பையில் நடந்த உலகக் கோப்பையை வெல்வதே தனது கிரிக்கெட் வாழ்க்கையின் மிக உயர்ந்ததாக இருந்த சச்சின் டெண்டுல்கர், 2013ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் இந்தியாவுக்காக 200 டெஸ்ட் மற்றும் 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி முறையே 15,921 மற்றும் 18, 426 ரன்கள் எடுத்துள்ளார். அத்துடன் சச்சின் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பல சாதனைகளையும் படைத்துள்ளார். 

இனி பாப்கார்ன் - கூல் ட்ரிங்ஸ் ஃப்ரீ 

இந்நிலையில், உலகக் கோப்பை போட்டிகளைக் காண வான்கடே மைதானத்திற்கு வருகை தரும் ரசிகர்களுக்கு இனி இலவச பாப்கார்ன் மற்றும் குளிர் பானங்கள் வழங்கப்படும் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்.சி.ஏ) அறிவித்துள்ளது. ரசிகர்கள் தங்கள் டிக்கெட்டுகளை டிக்கெட் கவுண்டரில் காட்டி முத்திரை பதிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து அவர்களுக்கு ஒரு முறை இலவச பாப்கார்ன் மற்றும் குளிர்பானம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“உலகக் கோப்பை போட்டிகளைப் பார்க்க வரும் அனைத்து ரசிகர்களுக்கும் ஒரு முறை பாப்கார்ன் மற்றும் குளிர்பானம் இலவசமாக வழங்க நான் முன்மொழிந்தேன். இது விருந்தோம்பல் இல்லாத பகுதிகளுக்கானதாக இருக்கும். அவர்களின் டிக்கெட்டுகள் முத்திரையிடப்பட்டவுடன், ஒவ்வொரு ரசிகருக்கும் இலவச பாப்கார்ன் மற்றும் கோக் வழங்கப்படும். அதற்கான செலவை எம்.சி.ஏ ஏற்கும். நாங்கள் இதை இந்தியா மற்றும் இலங்கை ஆட்டத்தில் இருந்து தொடங்குவோம். அது அரையிறுதி வரை தொடரும். எம்.சி.ஏ அபெக்ஸ் உறுப்பினர்கள் முன்மொழிவுக்கு ஒப்புக்கொண்டனர், ”என்று   எம்.சி.ஏ தலைவர் அமோல் காலே கூறினார். 

வருகிற நவம்பர் 2 ஆம் தேதி இந்தியா - இலங்கை போட்டிக்குப் பிறகு, ஆஸ்திரேலியா நவம்பர் 7 ஆம் தேதி ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. 2வது அரையிறுதிப் போட்டி நவம்பர் 16ஆம் தேதி வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Sachin Tendulkar Worldcup Wankhede Stadium
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment