Advertisment

கோவையில் ஷேவாக்: அஸ்வின் ஓய்வு பற்றி கருத்து கூறாமல் தவிர்ப்பு

கிரிக்கெட் போட்டியில் அஸ்வின் ஓய்வு பெற்றது குறித்து கேள்விக்கு கிரிக்கெட் வீரர் சேவாக் பதில் அளிக்க மறுத்து விட்டார் சத்குரு.

author-image
WebDesk
New Update
Sadhguru skips question asked about Indian spinner R ashwin at press meet Coimbatore Tamil News

கிரிக்கெட் போட்டியில் அஸ்வின் ஓய்வு பெற்றது குறித்து கேள்விக்கு கிரிக்கெட் வீரர் சேவாக் பதில் அளிக்க மறுத்து விட்டார் சத்குரு.

கோவை மாவட்டம் ஈஷா சார்பில் நடைபெறும் பாரதத்தின் மாபெரும் விளையாட்டுத் திருவிழாவான 16-வது ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் ஐந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் நடைபெற்ற போட்டியில் 40 ஆயிரம் மேற்பட்டோர் போட்டியில் கலந்து கொண்டனர்.அதில் ஆண்களுக்கு வாலிபால் போட்டியும், பெண்களுக்கு த்ரோபால் போட்டியும் என நடைபெற்றது.

Advertisment

அதற்கான இறுதி போட்டியானது கோவை மாவட்டம் ஈஷா யோகா ஆதியோகி சிலை முன்பு சத்குரு முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. கோவை ஆதியோகி முன் நடைபெற்ற இறுதி போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுகளை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்,வெங்கடேஷ் பிரசாத்,பாரா ஒலிம்பிக் வீரர்கள் மாரியப்பன் தங்கவேலு,துளசிமதி மற்றும் பண்ணாரி அம்மன் குழுமத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வழங்கினர்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சத்குரு, ஈஷா கிராமோத்சவம் நிகழ்ச்சி தற்போது 35 ஆயிரம் கிராமத்தில் நடைபெற்ற வருவதாகவும் வருங்காலத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள ஏழு லட்சம் கிராமத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்த இருப்பதாக தெரிவித்தார்.

கிராமப்புற பகுதில் இளைஞர்கள் மது போதைக்கு அடிமையாக இருந்தார்கள் தற்பொழுது இந்த நிகழ்ச்சி நடத்துவதனால் அனைவரும் போதை பழக்கத்தில் இருந்து விடுபட்டு விளையாடி வருவதாகவும் விளையாட்டு மூலம் யாரிடம் ஜாதி மதம் பார்க்க முடியாது என்றும் இதனால் இளைஞருக்கு ஒரு முன்னேற்ற ஏற்படும் என கூறினார்.

Advertisment
Advertisement

இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருவதை தடுக்காமல் அவர்களுக்கு வேறு வழியில் புத்துணர்வும் விழிப்புணர்வும் கொடுத்தால் அவர்கள் போதைப் பழக்கத்திலிருந்து மீண்டு வருவார்கள் என்று தெரிவித்தார். வருகின்ற ஐந்து ஆண்டுகளில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறும் என உறுதி அளித்தார்.

தனக்கு மூளை அறுவை சிகிச்சை செய்த போது மருத்துவர்கள் நம்பவில்லை அதன் பிறகு முற்றிலும் எனது மூளை எடுத்து வேற மூளை மாற்றி வைத்து அறுவை சிகிச்சை செய்தார்கள் நான் தற்பொழுது நலமாக உள்ளனர் கூறினார்.

அதனை தொடர்ந்து பேசிய பிரபல கிரிக்கெட் வீரர் சேவாக் கூறுகையில், கிரிக்கெட் போட்டியில் அஸ்வின் ஓய்வு பெற்றது குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதில் கூற மறுத்து விட்டார்.மேலும் நான் இப்போது ஈஷா கிராமோத்சவம் போட்டியில் பங்கேற்பதற்காக வந்துள்ளதாக மலுப்பலாக பதில் அளித்தார்.

தொடர்ந்து பேசிய வெங்கடேஷ் பிரசாத், ஐ.பி.எல் போட்டி விட ஈஷா கிராமத்து போட்டி பெரியது என்றும் ராமச்சந்திரன் போட்டி மூலம் அனைவருக்கும் ஒரு நல்ல ஆரோக்கியம் புத்துணர்வு கிடைக்கும் இதனால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என தெரிவித்தார்.

பாரா ஒலிம்பிக் வீரரான மாரியப்பன் பேசுகையில், 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கம் வென்ற போது விளையாட்டில் ஆர்வம் இருந்ததை விட தற்பொழுது அதிக அளவில் பாரா விளையாடில் கலந்து கொள்வதற்கு வீரர்கள் தயக்கம் காட்டி வந்த நிலையில் தற்போது ஈஷா கிராமோத்சவம் மூலமாக அதிகளவில் விளையாடி வருவதாக தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பாரா ஒலிம்பக் வீரங்கனை துளசிமதி கூறுகையில், தற்போது நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதாகவும் இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த சத்குருக்கு நன்றி தெரிவித்தார். தற்போது மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் பாரா விளையாட்டு போட்டியில் ஆர்வம் காட்டுகிறதாகவும் அதேபோல் நானும் கிராமப்புறத்தில் இருந்து வந்து விளையாட்டில் வெற்றி பெற்றுள்ளேன் அதேபோல் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

Ravichandran Ashwin Virender Sehwag
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment