Advertisment

நா. முத்துக்குமாரின் அனல் பறக்கும் வரிகளில் இருந்து உத்வேகம்: தமிழ்நாடு ரஞ்சி அணி கேப்டன் சாய் கிஷோர்

தமிழ்நாடு ரஞ்சி அணி கேப்டன் சாய் கிஷோர் தனது எண்ணங்களைத் தூண்டுவதற்கு, மறைந்த பாடலாசிரியரும் கவிஞருமான நா.முத்துக்குமாரின் உத்வேகத்திற்கான வரிகளை அசைபோடுகிறார்.

author-image
WebDesk
New Update
Sai Kishore TN Ranji skipper inspiration from fiery words of lyricist Na Muthukumar Tamil News

எல்லா ஆன்மீக ஆன்மாக்களைப் போலவே, சாய் கிஷோரும் தத்துவவாதி.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

 Tamilnadu Cricket Team | Ranji Trophy | Sai Kishore: தமிழ்நாடு ரஞ்சி அணி கேப்டன் ஆர். சாய் கிஷோர் ஆச்சரியங்கள் நிறைந்த வீரர் என்றால் மிகையாகாது. 

Advertisment

களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஒழுக்கமாக தோன்றும் ஒரு கிரிக்கெட் வீரரை கணிப்பது என்பது சுலபமான காரியம் அல்ல. இந்த விஷயத்தில், சாய் கிஷோர் தன்னை தானே 'பைத்தியகாரன்' (விசித்திரமானவர்) என்று விவரித்துக் கொள்கிறார். அதற்கும் அவரிடம் காரணம் உள்ளது. "நான் அடுத்து என்ன செய்யப் போகிறேன் என்று எனக்கே தெரியாது. நான் மிகவும் கணிக்க முடியாதவன் மற்றும் புரிந்து கொள்ள கடினமாக இருக்கிறேன். நான் ஏதாவது செய்வேன், ஏனென்றால், அந்த எண்ணம் என் தலையைத் தாக்குகிறது. அதற்குப் பின்னால் எந்த காரணமும் இல்லை, ”என்று அவர் கூறுகிறார். அவரது அணியினர் சிலர் கூட ஒப்புக்கொள்ளும் கருத்து இது.

ஆங்கிலத்தில் படிக்கவும்: Sai Kishore: The Ranji skipper who takes off to hills and temples and seeks inspiration from fiery words of lyricist Na Muthukumar to rally his men

அதற்கு காரணங்கள் உண்டு. 2021 ஆம் ஆண்டில், கவுகாத்தியில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரின் முடிவில் இந்திய ஒயிட்-பால் அணியின் ரிசர்வ் வீரராக மூன்று வாரங்கள் உயிர்-பாதுகாப்பான குமிழியில் செலவிட்ட சாய் கிஷோர், தனது பேக்குகளை எடுத்துக்கொண்டு குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட வீட்டிற்குச் செல்லவில்லை. மாறாக, அவர் தனது குடும்பத்தினருக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினார். அதில், வடகிழக்கு பகுதிகளை சுற்றிப் பார்க்க செல்வதாக குறிப்பிட்டார். அசாம் மற்றும் நாகாலாந்துக்கு இடையில் உள்ள மலைப்பாங்கான நிலப்பரப்பில் தியானம் செய்வதற்கு முன், உள்ளூர் கலாச்சாரத்தை ஆராய்ந்து, வடகிழக்கில் உள்ள தொலைதூர இடங்களுக்கு பயணத்தை மேற்கொண்டார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய சாய் கிஷோர், "நான் இடங்களை ஆராயச் சென்றேன், முற்றிலும் தொலைதூர மலைப்பாங்கான பகுதிக்குச் சென்றேன். அங்கு பறவைகளின் சத்தத்தைத் தவிர, வேறு எதுவும் இல்லை, நான் சிறிது நேரம் தியானம் செய்ய ஆரம்பித்தேன். நான் கண்களைத் திறந்தபோது, எனது ​​கம்பெனிக்காக துறவி ஒருவர் அங்கிருந்தார். நாங்கள் தியானத்தை முடித்தவுடன், சில மணிநேரங்கள் நடந்தோம், அங்கு அவர் தனது பயணத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் தான் 1500 கிலோமீட்டருக்கு மேல் நடந்துள்ளதாக கூறினார். அது என்னை பிரமிக்க வைத்தது. நான் அவருடன் இரண்டு மணிநேரம் கழித்தேன், ”என்று அவர் கூறுகிறார்.

சாய் கிஷோர் இப்படி தொலைதூர பயணம் மேற்கொள்வது இது முதல்முறை அல்ல. ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட அவர் கோவில்கள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். திருவண்ணாமலை கோவிலில் அவரை அடிக்கடி காணலாம். இந்த நாட்களில் அவர் அடிக்கடி செல்லும் இடமாக உள்ளது, அங்கு அவர் 14 கிமீ நீளமுள்ள கிரிவலம் மலையை சுற்றி நடப்பார்.

இது மிகவும் பொதுவானதாகத் தெரிகிறது, ஆனால் அவர் அத்துடன் முடித்து கொள்வதில்லை. அவர் மணிக்கணக்கில் தியானம் செய்வார் மற்றும் துறவிகளுடன் ஓய்வெடுப்பார், தரையில் தூங்குவார், முழங்கையை தலையணையாகப் பயன்படுத்துவார். மதியம் அன்னதானத்தில் (உணவு பரிமாறும்) ஈடுபடுவதற்கு முன், மண் மற்றும் அவர் இருந்த இடங்களை சுத்தம் செய்வதில் காலை நேரத்தை கழிப்பார். "அங்கே மிகவும் அமைதி மற்றும் நேர்மறை அதிர்வு உள்ளது. எனக்கு அத்தகைய இடங்கள் பிடிக்கும். எங்களது ட்ரெஸ்ஸிங் ரூமைப் போலவே இருக்கும். இதெல்லாம் இறைவன் அருள்" என்று வானத்தை நோக்கிச் சொல்கிறார் சாய் கிஷோர்.

தத்துவவாதி

எல்லா ஆன்மீக ஆன்மாக்களைப் போலவே, அவரும் தத்துவவாதி. சாய் கிஷோர் தனது எண்ணங்களைத் தூண்டுவதற்கு, மறைந்த தமிழ் பாடலாசிரியரும் கவிஞருமான நா முத்துக்குமாரின் உத்வேகத்திற்கான வரிகளை அசைபோடுகிறார். ஆர்,ஜே போல, அணி தங்கியிருக்கும் ஹோட்டலில் சில இரவுகள் சாய் கிஷோரின் வார்த்தைகளில் "நா முத்துக்குமார் இரவுகள்" (முத்துக்குமார் இரவுகள்) என நேரங்கள் கழியும். அங்கு அவரது சில வரிகள் அணி தன்னைக் கண்டுபிடிக்கும் தருணத்தை சிறப்பாக வரையறுக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

"அவரது பாடல் வரிகள் குறைவாக மதிப்பிடப்படுகின்றன என்று நான் எப்போதும் நம்புகிறேன். ஆனால் அங்குதான் அழகு இருக்கிறது. நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் மற்றும் காட்சியமைப்பு அனைவருக்கும் நினைவிருக்கிறது. ஆனால் பாடல் வரிகளோ பாடலாசிரியரோ அல்ல. அது இல்லாமல், இசையில் ஆத்மா இல்லை." என்கிறார். 

சாய் கிஷோர் தனது கிதார் முழக்கத்துடன் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களுடன் மாலை நேரம் மாறாமல் நகர்கிறது. இந்த நாட்களில், அவற்றுடன் அர்ஜித் சிங்கின் சில காதல் மெல்லிசைகளையும் சேர்த்துள்ளன, மேலும் அவை எப்போதும் இறுக்கமான கூட்டமாக மாறிவிட்டன. "நாங்கள் வீட்டை விட்டு நிறைய நேரம் செலவிடுவோம் என்று எனக்குத் தெரியும். நாம் ஒருவருக்கொருவர் சகவாசத்தை அனுபவிக்க வேண்டும், இசை போல எதுவும் நம்மை ஒன்றிணைக்காது. குழு பிணைப்பு அமர்வை வலுக்கட்டாயமாக வைத்திருப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஒரு குழு என்றால், வெவ்வேறு வகையான ஆளுமைகள் இருப்பார்கள், அதற்கேற்ப அவர்கள் ஒன்றிணைவார்கள். அணியில் உள்ள இளம் வீரர்கள் எங்கள் அணியை ரசிக்காமல், தாங்களாகவே ஏதாவது செய்ய விரும்புவார்கள். எனவே அதை ஏன் நிறுத்த வேண்டும்? ” அவர் சொல்கிறார். 

இந்த கணிக்க முடியாத, வித்தியாசமான கண்ணோட்டத்தில் விஷயங்களைப் பார்த்து, கேப்டனாக பொதுவான முறைகளைக் கைவிட்டு, ஏழு ஆண்டுகளில் இந்த அணியை அதன் முதல் ரஞ்சி டிராபி அரையிறுதிக்கு சாய் கிஷோர் அழைத்துச் சென்றுள்ளார். இந்த சீசனில் அவர் கேப்டனாக பொறுப்பேற்றபோது, ​​முந்தைய ஆறு ஆண்டுகளைப் போலவே ரஞ்சி தொடர் முடிவடையும் என்று தோன்றியது. இந்த முறை அவர்களுக்கு மேலும் காரணங்கள் இருந்தன.

புதிய தலைமைப் பயிற்சியாளர் சுலக்ஷன் குல்கர்னியின் கீழ், ஒயிட்-பால் ஜாம்பவான்கள் என்று அறியப்பட்ட ஒரு அணிக்காக, சையத் முஷ்டாக் அலி டி20களில் தமிழக அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.  விஜய் ஹசாரேவில் அவர்களை அரையிறுதிக்கு அழைத்துச் சென்ற தினேஷ் கார்த்திக் காப்பாற்றினார். மேலும் ரஞ்சி தொடங்கிய போது நம்பிக்கை இல்லை. அணி இன்னும் குல்கர்னியின் முறைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. 

பாபா இந்திரஜித், விஜய் சங்கர், என் ஜெகதீசன் போன்றவர்கள் தங்களை அவசியம் ஆட வேண்டிய தருணத்தில் கண்டனர். இவை அனைத்தும் மற்றொரு பேரழிவு பருவத்தை நோக்கி சிக்னல் செய்தன. ஆனால் சாய் கிஷோர் இந்த மூன்று வீரர்களின் உதவியுடன் மேசைகளைத் திருப்பினார். 

“உண்மையைச் சொல்வதென்றால், கடந்த சீசனில் இருந்து வித்தியாசமாக எதையும் நாங்கள் செய்யவில்லை. கடந்த ஆண்டு நாங்கள் தகுதி பெறாமல் இருந்தோம். கடந்த சீசனுடன் ஒப்பிடுகையில் இந்த முறை, சில விஷயங்கள் நம் வழியில் சென்றுள்ளன, இந்த முறை நாங்கள் சற்று அனுபவமற்றவர்கள். எங்களிடம் மூன்று புதிய பேட்ஸ்மேன்கள் மற்றும் ஒரு பவுலர் உள்ளனர். அவர்கள் உடனடியாக மேட்ச்-வின்னிங் செயல்திறனை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே எங்களுக்கு இடையே (மூத்தவர்கள்), நாங்கள் பொறுப்பை பகிர்ந்து கொண்டோம், ”என்கிறார் சாய் கிஷோர்.

தமிழக அணி மும்பையில் உள்ள பிகேசி மைதானத்தில் ஹெவிவெயிட் சாம்பியனான வலம் வரும் மும்பையை எதிர்கொள்கிறது. சாய் கிஷோர் தமிழக டிரஸ்ஸிங் ரூமில் உள்ள மனநிலையை விவரிக்க நா.முத்துக்குமாரின் இந்த பாடல் வரிகளை பயன்படுத்துகிறார். "கரை வரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம்... எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்..." 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Ranji Trophy Tamilnadu Cricket Team Sai Kishore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment