டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில், முன்னாள் உலகின் நம்பர் ஒன் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வால் புதன்கிழமை பாஜகவில் இணைந்தார். விளையாட்டு வீராங்கனையான சாய்னா அரசியல்வாதியானார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
முன்னாள் நம்பர் ஒன் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வால் புதன்கிழமை பாஜகவில் சேர்ந்தார். பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்காக தனது "கடின உழைப்பின் மூலம் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார் என்று புகழ்ந்தார்.
டெல்லியில் பாஜக தலைமையகத்தில் நடந்த விழாவில், அக்கட்சியில் இணைந்த 29 வயதான சாய்னா நெஹ்வால் பாஜக நிறைய நன்மைகளை செய்து வருவதாகவும், அவர் பாஜகவின் உறுப்பினராக தனது பங்களிப்பைச் செய்து பணியாற்றுவார் என்றும் கூறினார்.
மத்திய அரசின் கொள்கைகளுக்கு ஆதரவாக டுவிட்டரில் குரல் கொடுத்துள்ள சாய்னா நெஹ்வால், செய்தியாளர்களிடம் கூறுகையில், தான் ஒரு கடின உழைப்பாளி என்றும் கடின உழைப்பாளி மக்களை விரும்புவதாக கூறி மோடியைப் புகழ்ந்தார்.
சாய்னா நெஹ்வால் கடந்த காலங்களில் நரேந்திர மோடி அரசையும் அதன் திட்டங்களையும் ஆதரித்து பேசினார். கடந்த ஆண்டு அக்டோபரில் சாய்னா பதிவிட்ட ஒரு டுவிட் அரசாங்க வேலைத்திட்டத்திற்கு ஆதரவாக அவர் பதிவிட்ட பல டுவிட்களைப் போல இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து சர்ச்சையானது.